கோவிட்-19, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல்வேறு சர்வதேச நிலவரங்களால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தைகள் நிலையற்றதாகவே இருந்தது. இதனால், நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை சரியான பங்குகளில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது. சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் பல நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. அப்படி முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்த பங்குகளில் ஒன்றுதான் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவன பங்கு.
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் நாட்டின் முன்னணி ஸ்டீல் உற்பத்தியாளராக உள்ளது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனமும் ஒன்று. நீண்ட கால அடிப்படையில், முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை பெருக்கும் எந்திரமாக இப்பங்கு உள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் இப்பங்கு 33,000 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவன பங்கு விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து ரூ.907ஆக உயர்ந்துள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இப்பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது காலப்போக்கில் இன்று ரூ.3.32 கோடியாக வளர்ந்திருக்கும். இந்த பங்கு கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு 639.29 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 12 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 11 சதவீதம் குறைந்துள்ளது.அதேசமயம் கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 8.22 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இபங்கின் விலை 4.33 சதவீதம் குறைந்துள்ளது.
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.950.88 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவாகும். 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,927.99 கோடி ஈட்டியிருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.11,750.67 கோடி ஈட்டியிருந்தது. இது 2023 டிசம்பர் காலாண்டில் ரூ.11.701.32 கோடியாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.41 சதவீதம் குறைந்து ரூ.890.00ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications