ரிலையன்ஸ் குழுமத்தின் நிதி சேவை பிரிவான Reliance Strategic Investments நிறுவனத்தைத் தனியாகப் பிரித்து Jio Financial Services என பெயர் மாற்றப்பட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப் பட்டியலிடப்பட உள்ளது. இதற்காக வியாழக்கிழமை காலை 9-10 மணிக்குச் சிறப்பு pre-open session நடக்க உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வைத்துள்ள அனைவருக்கும் 1:1 கணக்கில் புதிதாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் JFSL எனப்படும் Jio Financial Services limited பங்குகள் அளிக்கப்பட உள்ளது. இன்று காலை 9-10 மணிக்கு நடக்க உள்ள சிறப்பு pre-open session-ல் ஜியோ பைனான்சியல் பங்குகளின் விலை கணக்கிடப்படுகிறது.

இந்த சிறப்பு pre-open session-ல் Jio Financial Services limited பங்குகளின் நிலையான விலை அதாவது கான்ஸ்டென்ட் விலை கணக்கிடப்படும். புதன்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலைக்கும், சிறப்பு ப்ரீ-ஓபன் வர்த்தகத்தில் பெறப்பட்ட விலைக்கும் உள்ள வித்தியாசத்தை Jio Financial Services limited பங்கு விலையாக நிர்ணயம் செய்யப்படும்.
புதன்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2840.00 ரூபாய் விலைக்கு முடிந்துள்ளது. சிறப்பு pre-open session என்பது 9-10 மணிக்கு நடக்க உள்ள காரணத்தால் ரிலையன்ஸ் பங்குகள் 10 மணி வரையில் எவ்விதமான வர்த்தகம் நடைபெறாது. இதனால் நிஃப்டி 50 குறியீட்டில் 49 சதவீத பங்குகளின் வர்த்தகத்தின் விலையை வைத்துத் தான் அதன் கணக்கிடப்படும்.
தேசிய பங்குச்சந்தையில் ஏப்ரல் மாதம் நடந்த விதி மாற்றங்கள் ஜியோ பைனான்சியல்-க்கு சாதகமாக அமைந்தது. இதன் மூலம் 9 - 10 மணி காலகட்டத்திற்கு நிஃப்டி 50 இன்டெக்ஸ் 49 சதவீத பங்குகளின் ரியல் டைம் விலை, ரிலையன்ஸ்-ன் புதன்கிழமை விலை, ஜீரோ மதிப்புடன் ஜியோ பைனான்சியல் பங்குகள் கணக்கிட்டு Nifty50 index value தீர்மானிக்கப்படும்.
10 மணி உடன் சிறப்பு ப்ரீ-ஓபன் வர்த்தகம் முடிந்த பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது இயல்பான வர்த்தகத்தைத் துவங்கும், Nifty50 index மதிப்பும் இயல்பான முறையில் கணக்கிடப்படும், அதாவது ரியல் டைல் மதிப்பில் கணக்கிடப்படும்.
மேலும் அடுத்த 3 நாட்களுக்கு Nifty50 குறியீட்டில் ஜியோ பைனான்சியல் பங்குகள் 51வது நிறுவனமாகக் கணக்கில் வைக்கப்படும். இதன் மூலம் demerger ஆகும் நிறுவனப் பங்குகளின் தடுமாற்றம் குறையும், 3வது நாளுக்குப் பின்பு ஜியோ பைனான்சியல் பங்குகள் தனித்துவிடப்பட்டு சந்தை விலைக்கு ஏற்ப வர்த்தகம் செய்யப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications