முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் துணை நிறுவனம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட். இந்நிறுவனம் நிதி சேவை நிறுவனமாகும். மேலும் இந்நிறுவனம் டெபாசிட் பெறாத வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் பங்குகளில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் பங்கும் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் வலுவான நிதி நிலை முடிவுகள் மற்றும் வர்த்தக வளர்ச்சி சிறப்பாக இருப்பதால் முதலீட்டாளர்கள் இந்த பங்கில் முதலீடு செய்கின்றனர்.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த 3 தினங்களாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் பங்கு விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இந்நிலையில், தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதும் ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.54 சதவீதம் உயர்ந்து ரூ.220.95ல் வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை சுமார் 2 சதவீதம் வரை உயர்ந்தது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.638.06 கோடியும், நிகர லாபமாக ரூ.382.47 கோடியும் ஈட்டியிருந்தது. 2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.383 கோடியும், நிகர லாபமாக ரூ.305 கோடியும் ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.137 கோடியும், நிகர லாபமாக ரூ.75 கோடியும் ஈட்டியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவதை வெளிப்படுத்துகின்றன.
2024 ஏப்ரல் 4ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.394.70ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமாக ரூ.198.60க்கு சென்றது.
அதன் பிறகு தொடர்ந்து 4 தினங்களாக இப்பங்கின் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 வர்த்தக தினங்களில் மட்டும் ஜியோ பைனான்சியல் பங்கு விலை 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications