இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதன் கீழ் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனமாக இருக்கிறது ஜியோ. முகேஷ் அம்பானி இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். உலகமே உற்று நோக்கும் அதிக போட்டி நிறைந்த ஐபிஓ வெளியீடாக ஜியோ ஐபிஓ இருக்க போகிறது.
இந்திய பங்கு சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஐபிஓவாக எதிர்பார்க்கப்படும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பங்கு வெளியீடு, வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட பண்டிகை காலத்தில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிட தயாராகி வருவதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

அக்டோபர் மாத இறுதியில் வரவிருக்கும் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை காலத்தில் ஐபிஓ சப்ஸ்கிரிப்ஷனை தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சர்வதேச முதலீட்டாளர் சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகள் அடுத்த வாரமே தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ நிறுவனம் 3 வாரங்கள் சர்வதேச அளவிலும், அதனை தொடர்ந்து 2 வாரங்கள் உள்நாட்டு முதலீட்டாளர்களுடனும் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஒருவேளை தேதிகளில் தாமதம் ஏற்பட்டால், நவம்பர் முதல் வாரத்தில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலத்தில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளதாம்,. விரைவில் ஜியோ நிறுவனம் இதற்கான அதிகாரப்பூர்வ தேதிகளை இறுதி செய்யும். இந்த ஐபிஓ-வின் மதிப்பு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 37,700 கோடி முதல் 37,800 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பங்கு சந்தை வரலாற்றிலேயே இது மிகப்பெரிய ஐபிஓ என்ற சாதனையை படைக்கும். இந்த ஐபிஓ-வில் புதிய ஈக்விட்டி பங்குகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளன. 27 கோடி புதிய பங்குகள் வெளியிடப்படவுள்ளன. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதமே தனது ஐபிஓ-வுக்கான வரைவு ஆவணங்களை சமர்ப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 28 அன்று செபி ஐபிஓ வெளியீட்டிற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கிவிட்டது.
இந்த ஐபிஓ வில் விண்ணப்பம் செய்து ஜியோ பங்குகளை வாங்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திரப்படும் பணமானது கடன்களை முன் கூட்டியே செலுத்துவது, நிறுவன எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்துவது, புது தொழில்நுட்பங்களை கொண்டு வருவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஏற்கனவே பல உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமே கிட்டத்தட்ட 30.9% பங்குகளை வைத்துள்ளனர். மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜாது ஹோல்டிங்ஸ் 9.98%, கூகுள் இன்டர்நேஷனல் 7.73%, சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் , சில்வர் லேக் ,அபுதாபி முதலீட்டு ஆணையம் ஆகிய அமைப்புகளும் முதலீடு செய்துள்ளன.ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பிரம்மாண்டமான ஐபிஓ வெளியீடு சரிந்து கிடக்கும் இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

