உங்களுக்கு JIO IPOஇல் பங்கு கிடைச்சிருக்கா? எப்படி தெரிந்து கொள்வது? இந்த தேதியெல்லாம் நோட் பண்ணுங்க..!!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ (Jio Platforms IPO) விண்ணப்பங்கள் நிறைவடைந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், வெளியான ஜியோ ஐபிஓவில் எப்படியாவது பங்குகளை பெற வேண்டும் என 1 கோடி விண்ணப்பங்கள் வரை வந்துள்ளன. ஜியோ ஐபிஓ உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்துள்ளது.

விண்ணப்ப தேதி முடிந்துள்ள நிலையில் அனைவரின் பார்வையும் பங்கு ஒதுக்கீடு மற்றும் ஐபிஓ பட்டியலிடும் தேதி மீது தான் இருக்கிறது. இந்த ஐபிஓவில் விண்ணப்பம் செய்தவர்களில் யாருக்கெல்லாம், பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது நாளை தெரிந்துவிடும். நாளை முதல் பங்கு ஒதுக்கீடு பெற்ற அனைவருக்கும் டீமேட் கணக்கில் ஜியோ பங்குகள் வரவு வைக்கப்படும். இதற்கான மெசேஜ் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்களுக்கு JIO IPOஇல் பங்கு கிடைச்சிருக்கா? எப்படி தெரிந்து கொள்வது?  இந்த தேதி நோட் பண்ணுங்க..!!

ஒரு வேளை உங்களுக்கு ஐபிஓவில் ஜியோ பங்குகள் ஒதுக்கப்படவில்லை என்றால் நாளை அல்லது நாளை மறுதினம் பணம் மீண்டும் உங்கள் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு விடும். வரும் புதன்கிழமை பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-இல் ஜியோ பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.ஜியோ பங்குகள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி பார்ப்பது என விரிவாக பார்க்கலாம்.

Also Read

KFin Technologies இணையதளம்:

KFin Technologies நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஐபிஓ பக்கத்திற்கு செல்லவும்

அதில் ஐபிஓ பட்டியல் இருக்கும், அதில் Reliance Jio Platforms Limited என்பதை தேர்ந்தெடுக்கவும்

உங்கள் பான் எண் (PAN), விண்ணப்ப எண் (Application Number) அல்லது DP ID/Client ID ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும்

கேப்ட்சா (Captcha) குறியீட்டை நிரப்பி Submit பட்டனை க்ளிக் செய்தால் உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டதா இல்லையா என தெரிந்துவிடும்.

BSE இணையதளம்:

BSE-யின் அதிகாரப்பூர்வ ஐபிஓ விண்ணப்ப நிலை பக்கத்திற்கு செல்லவும்

Issue Type என்பதில் Equity என்பதை தேர்ந்தெடுக்கவும்

Issue Name பகுதியில் Reliance Jio Platforms Limited என்பதை தேர்ந்தெடுக்கவும்

உங்கள் விண்ணப்ப எண் அல்லது பான் எண்ணை உள்ளிட்டால் போதும்

Recommended For You

NSE இணையதளம்:

NSE IPO Bid பக்கத்திற்கு செல்லவும்

Equity and SME IPO bid details பிரிவை கிளிக் செய்யவும்

ஜியோ ஐபிஓ-வை கிளிக் செய்து உங்கள் பான் எண் அல்லது விண்ணப்ப விவரங்களை உள்ளிடவும்.

புதன்கிழமை காலை 10 மணிக்கு ஜியோ பங்குகள் பட்டியலிடப்படும். ஐபிஓவில் பங்கு கிடைக்காத பலரும் முதல் நாளில் ஜியோ பங்கினை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஐபிஓ விலையை விட 20% க்கும் அதிகமான விலைகே பங்குகள் பட்டியலிடப்படும் என சொல்லப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+