இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் முதலீட்டாளர்களும் ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ-விற்காக மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு உள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-க்கு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்டிங் குவிந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்த ஐபிஓ-வில் பங்கு பெறுவதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்கள் தாண்டி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஆர்வமாக இருப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல் படி ஃபெடிலிட்டி, அலையன்ஸ், கேப்பிடல் குரூப் போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களும், பல உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ-வில் பங்கு பெற ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஐபிஓ வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அடுத்த சில நாடுகளில் ஆங்கர் முதலீட்டாளர்களின் இறுதி பட்டியலை வெளியிடும் எனவும், இதற்கான ஆய்வு மற்றும் ஆலோசனை பணிகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ பிளாட்பார்ம்ஸ் தனது ஐபிஐ மதிப்பை மறுசீரமைப்பு செய்துள்ள நிலையில் தற்போது 106 பில்லியன் டாலர் அல்லது 10.3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மதிப்பில் ஜியோ ஐபிஓ-வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஐபிஓ மூலம் ஜியோ சுமார் 30,200 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய ஐபிஓ-வாக ஜியோ இருக்கும்.
அடுத்த வாரம் அல்லது அக்டோபர் 30ஆம் தேதிக்குள் ஐபிஓ வெளியிடத் திட்டமிடப்பட்டு இருக்கும் வேளையில், 10.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பங்கு 1065 - 1119 ரூபாய் விலையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் அனைத்து பங்குகளையும் ஃபிரஷ் வெளியிட்டாக வெளியிட உள்ளது. இதன் மூலம் ஜியோ-வின் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் கூகுள், மெட்டா, Mubadala மற்றும் சவுதி அரேபியாவின் PIF போன்ற முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்கு இருப்பை குறைக்க மனமில்லை என்பதை உணர்த்துகிறது.
ரிலையன்ஸ் குழுமம் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஓ வெளியிடுவதால் முதலீட்டுச் சந்தையில் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது.
கடைசியாக 2006ல் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தை ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்டது, இதன் பின் டீமெர்ஜர் வாயிலாக ஜியோ பைனான்சியல் வாயிலாகப் பங்குச்சந்தை கதவுகளைத் தட்டியது. ஆனால் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு 20 வருடத்திற்குப் பின்பு முதல் முறையாக வருகிறது.


Click it and Unblock the Notifications