ஜியோ ஐபிஓ விண்ணப்பம் செய்ய போறீங்களா? – இந்த விஷயங்கள படிச்சிட்டு முடிவெடுங்க..!!

முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டுள்ளது. எப்படியாவது இந்த ஐபிஓவில் விண்ணப்பம் செய்து ஜியோ பங்குகளை வாங்கி விட வேண்டும் என முதலீட்டாளர்கள் மத்தியில் போட்டி நிலவுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஜியோ ஐபிஓ விண்ணப்பம் செய்பவர்களுக்கு தரகு நிறுவனங்கள் சில அறிவுரைகளை வெளியிட்டுள்ளன.

ஜியோ இந்த பங்கு வெளியீட்டின் மூலம் மொத்தமாக சுமார் 30,213 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. இதில் முழுக்க முழுக்க புதிய பங்குகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஒரு பங்கை வாங்குவதற்கான விலை 1,065 முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 பங்குகள் கொண்டது ஒரு லாட்.

ஜியோ ஐபிஓ விண்ணப்பம் செய்ய போறீங்களா? – இந்த விஷயங்கள படிச்சிட்டு முடிவெடுங்க..!!

சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட் (12 பங்குகள்) வாங்க குறைந்தபட்சம் 13,428 ரூபாய் தேவைப்படும். தகுதியான நிறுவன ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு 54 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஜியோ ஐபிஓ முக்கிய தேதிகள்:

ஐபிஓ விண்ணப்பம் தொடங்கும் நாள்: அக்டோபர் 21, 2026

ஐபிஓ முடியும் நாள்: அக்டோபர் 23, 2026

பங்கு ஒதுக்கீடு: அக்டோபர் 26, 2026

பங்கு சந்தையில் பட்டியல்: அக்டோபர் 28, 2026

Also Read

டெலிகாம் துறையில் ஜியோவின் ஆதிக்கம் மற்றும் வருவாய் வளர்ச்சி மிக நிலையாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் மற்றும் ஃபிக்சட் பிராட்பேண்ட் நிறுவனமாக விளங்கும் ஜியோ, ஜூன் 30, 2026 நிலவரப்படி சுமார் 53.33 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதும், ஃபைபர் மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவுகள் விரிவாக்கம் பெறுவதும் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

Recommended For You

டெலிகாம் துறையில் லாபத்தை நிர்ணயிக்கக்கூடிய மிக முக்கிய காரணி ARPU ஆகும். ஜியோவின் மாதாந்திர ARPU மதிப்பு 208.8-லிருந்து 215.6 ரூபாயாக உயர்ந்துள்ளது. 5G சேவைகளுக்கான அப்டேட், பிரீமியம் பிளான்களுக்கு மாறுவது மற்றும் கட்டண உயர்வு நடவடிக்கைகள் மூலம் இந்நிறுவனத்தின் லாபம் நீடிக்கும் என கணிக்கின்றனர்.

5G உள்கட்டமைப்புக்கான ஆரம்ப கால பெருமளவிலான முதலீடுகள் நிறைவடைந்ததை அடுத்து, ஜியோவின் மூலதன செலவுகள் கணிசமாக குறைந்துள்ளன. இதன் காரணமாக நிறுவனம் ஆரோக்கியமான இயக்க லாபத்தை மற்றும் வலுவான பணப்புழக்கத்தை ஈட்டி வருகிறது. இது எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

PhilipCapital நிறுவனம் சிறந்த வருமானம், தொழில் விரிவாக்கம் ஆகியவை சாதகமாக இருப்பதால் இந்த ஐபிஓவில் பங்கு வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. Emkay Global நிறுவனம் டெலிகாம் துறையில் அசைக்க முடியாத இடம், இந்தியாவில் இந்த துறையில் இருக்கும் வளர்ச்சி வாய்ப்பு, 10 ஆண்டுகளில் நிருவனம் கண்ட வளர்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டு இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என கூறியுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+