அம்பானி காட்டில் பணமழை..! JIO IPO முதல் ஒரு மணி நேரத்திலேயே நிகழ்த்திய சாதனை..!!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் டெலிகாம் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடப்பட்டுள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிக ஆர்வத்துடன் போட்டி போட்டு கொண்டு ஜியோ பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்துள்ளனர்.

விண்ணப்பம் தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே முழுமையான சந்தாதாரரை பெற்ற (fully subscribed) ஐபிஓ என்ற பெருமையை ஜியோ ஐபிஓ பெற்றுள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் இந்த பிரம்மாண்ட ஐபிஓ விண்ணப்பம் இன்று காலை தொடங்கப்பட்டது. வெறும் 35 முதல் 100 நிமிடங்களுக்குள்ளாகவே முழுமையாக suscribersகளை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அம்பானி காட்டில் பணமழை..! JIO IPO முதல் ஒரு மணி நேரத்திலேயே நிகழ்த்திய சாதனை..!!

இந்த ஐபிஓ-வின் மதிப்பு தோராயமாக 30,213 கோடி ரூபாய். இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய பப்ளிக் ஆஃபரிங் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் என அனைவரும் போட்டி போட்டு கொண்டு ஜியோ பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ஐபிஓ மூலம் புதிதாக 27 கோடி பங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 27 கோடி பங்குகளை வாங்க முதல் ஒரு மணி நேரத்திலேயே விண்ணப்பங்கள் வந்துவிட்டன.

Also Read

சில்லறை முதலீட்டாளர்களுக்கு முன்பாகவே, ஏகப்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் 212 ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு சுமார் 8,110 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஆங்கர் ஒதுக்கீட்டிற்காகவே முதலீட்டாளர்களிடமிருந்து 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான அதாவது சுமார் 30 மடங்குக்கும் மேல் விண்ணப்பம் வந்தது.

சில்லறை முதலீட்டாளர்களும் வேகமாக இதற்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர். ஜியோ ஐபிஓ-வில் ஒரு பங்கை வாங்குவதற்கான விலை 1,065 முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 பங்குகள் கொண்டது ஒரு லாட். சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட் (12 பங்குகள்) வாங்க குறைந்தபட்சம் 13,428 ரூபாய் தேவைப்படும். தகுதியான நிறுவன ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு 54 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அக்டோபர் 23 வரை விண்ணப்பம் செய்யலாம். அக்டோபர் 26 அன்று பங்குகள் ஒதுக்கப்பட்டு டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். அக்டோபர் 28ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

Recommended For You

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் அம்பானி , டெலிகாம் சேவைகளை தாண்டி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு , மற்றும் கிளவுட் வணிகங்களை விரிவுபடுத்துவதே தங்களின் முக்கிய இலக்கு என கூறியுள்ளார். இந்த நவீன தொழில்நுட்ப விரிவாக்க திட்டங்களே முதலீட்டாளர்கள் மத்தியில் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. ஜியோ இந்த ஐபிஓ மூலம் திரட்டும் பணத்தை கொண்டு கடன்களை அடைத்து புதிய திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்த உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+