ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தை(JSW group) சேர்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை நிறுவனம் ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி. இந்த நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் முதலீட்டை அதிகரித்துள்ளன.
ஜே.எஸ்.டபிள்யூ நியோ எனர்ஜி(JSW neo energy) என்பது ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி (JSW Energy) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அண்மையில் இந்த நிறுவனம் 300 மெகாவாட் காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

மொத்தம் 1,500 மெகாவாட் மின் உற்பத்திக்காக நடத்தப்பட்ட ஒப்பந்த புள்ளியில் இந்த நிறுவனத்திற்கு 300 மெகாவாட் மின் உற்பத்திக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் என்பது 13.9 கிகாவாட் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
2024 ஆம் நிதி ஆண்டிற்குள் இந்த நிறுவனம் தங்களது செயல்பாட்டில் இருக்கும் மின் உற்பத்தி திறனை 9.8 கிகவாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தை பெற்றதன் மூலம் ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கணிசமான வளர்ச்சியை கண்டு வருவது தெரிய வருகிறது.
ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தை சேர்ந்த ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி ,இந்தியாவில் வளர்ந்து வரக்கூடிய ஒரு எரிசக்தி நிறுவனம் ஆகும். இந்த குழுமம் கார்பன், ஸ்டீல், மின்சாரம் ,சுரங்கம் ,தொழிற்சாலைகளுக்கு தேவையான வாயுக்கள், துறைமுக வசதிகள், அலுமினியம், சிமெண்ட் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை என பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளது. இதில் ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தை சேர்ந்த எனர்ஜி நிறுவனத்தின் செயல்பாட்டில் இருக்கக்கூடிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 7.3 கிகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது 2.6 கிகாவாட் மின் உற்பத்திக்கான நிலையங்களை இது கட்டி வருகிறது, அது மட்டும் இன்றி 4 கிகாவாட் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பும் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் பங்கானது கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1000 சதவீத லாபத்தை தந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் 173 சதவீத லாபத்தை தந்துள்ளது.
ஜூலை 1ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 750 ரூபாய் என்று அளவில் வர்த்தகமானது. ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.12 சதவீதம் உயர்ந்தது. இந்த நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் தங்களுடைய பங்குகளை கணிசமான அளவு அதிகரித்துள்ளன.
2024 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 16,941 கோடி ரூபாயாகும், இதில் லாபம் 1825 கோடி ஆகும் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.28 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications