ரயில்வே துறை சார்ந்து இயங்கக்கூடிய ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் தங்கள் பங்குகளை பிரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கே & ஆர் ரயில் இன்ஜினியரிங் (K&R Rail Engineering) என்ற நிறுவனம் ரயில்வே துறை சம்பந்தப்பட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஸ்மால் கேப் நிறுவனம் தங்கள் நிறுவன பங்குகளை 10:1 என்ற விகிதத்தில் பிரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி அன்று இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 7 சதவீதம் வரை உயர்ந்தது.

டிசம்பர் 5ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு சுமார் 1.9% உயர்ந்து 437 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஸ்மால் கேப் நிறுவனம் ரயில்வே துறை சம்பந்தப்பட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் இந்த நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கள் நிறுவன பங்குகளை 10:1 என்ற விகிதத்தில் பிரிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அதாவது 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்கினை 1 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட 10 பங்குகளாக பிரிப்பது என ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு பங்குகளை பிரிப்பதற்கான ரெக்கார்ட் தேதி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன்படி இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் பங்குகளின் எண்ணிக்கை 10 ஆக மாறப்போகிறது .
சில்லறை முதலீட்டாளர்கள் எளிதாக தங்கள் நிறுவன பங்குகளை வாங்கி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவனங்கள் அவ்வப்போது தங்கள் நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூவை குறைத்து அவற்றை பிரிக்கும். சில நிறுவனங்கள் ஒரு பங்கினை இரண்டாகவும், சில நிறுவனங்கள் ஒரு பங்கினை ஐந்தாகவும் பிரிக்கும். இந்த நிறுவனம் ஒரு பங்கினை 10 ஆக பிரிக்கிறது.
இந்த நிறுவன பங்கு மதிப்பு கடந்த ஓராண்டில் 42 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. அதே கடந்த மூன்று ஆண்டுகளில் 1330 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இதன் மதிப்பு 11% வரை அதிகரித்து இருக்கிறது இந்த நிறுவனத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் 54 சதவீத பங்குகளையும் புரமோட்டர்கள் 45 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications