காகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் பிவிசி கதவுகள் உள்பட உயர்தர பிவிசி தயாரிப்புகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. 2019ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் குறுகிய காலத்திலேயே பிவிசி தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளர், சப்ளையர் மற்றும் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. 2023 ஜூலையில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. ஜூலை 10ம் தேதியன்று இந்நிறுவனத்தின் ஐபிஓ தொடங்கி 12ம் தேதி நிறைவடைந்தது. ஐபிஓவின் ஒரு பங்கின் விலை ரூ.55-58 என்ற விலையில் பங்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஐபிஓவின் இறுதியில் ரூ.58 என்ற விலையில் பங்குகள் ஒதுக்கப்பட்டது. 2023 ஜூலை 19ம் தேதியன்று பங்குச் சந்தையில் காகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.110.20 என்ற விலையில் பங்குகள் பட்டியலிடப்பட்டன. இது ஐபிஓ வெளியீட்டு விலையை காட்டிலும் 90 சதவீதம் கூடுதலாகும். பிஎஸ்இ எஸ்எம்இ தளத்தில் இப்பங்குகள் பட்டியலிடப்பட்டன. பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட்டது முதல் காகா இண்டஸ்ட்ரீஸ் பங்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. 2024 டிசம்பர் மாதத்தில் இப்பங்கின் விலை புதிய உச்சமான ரூ.340ஐ எட்டியது. அதாவது வெளியீட்டு விலையை காட்டிலும் இப்பங்கின் விலை 4.86 மடங்கு அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே காகா இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ.280ஆக இருந்தது. தற்போதைய விலை அடிப்படையில் பார்த்தாலும், இதுவரையிலான காலத்தில் காகா இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு 380 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளும் சிறப்பாக உள்ளது. 2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.95 கோடி ஈட்டியுள்ளது. மேலும், நிகர லாபமாக ரூ.6.52 கோடி ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருவாய் ரூ.4.77ஆக இருந்தது.
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் கத்லால் தாலுகாவில் உள்ள லசுந்திராவில் இந்நிறுவனத்துக்கு ஒரு உற்பத்தி ஆலை உள்ளது. மின் விநியோகத்தில் நிலவிய பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்த ஆலை முழு திறனில் இயக்க முடியாமல் இருந்தது. தற்போது மின் விநியோகத்தில் நிலவிய பிரச்சினை சரிசெய்யப்பட்டு தற்போது அந்த ஆலை முழுமையாக இயக்கப்படுவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் காகா இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story Written by: Subramanian


Click it and Unblock the Notifications