3 ஆண்டுகளில் 600% மேல் லாபம் கொடுத்த நகைக்கடை பங்குகள்.. ஆனா இப்ப அடி மேல் அடி..!

நாட்டின் முன்னணி சங்கிலி தொடர் தங்க நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்று கல்யாண் ஜூவல்லர்ஸ். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு நகை நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது, செயல்திறன் நன்றாக இருப்பது போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி இருந்தது. இம்மாதம் 2ம் தேதி மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கு விலை புதிய உச்சமான ரூ.794.60ஐ எட்டியது.

ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகளை வாங்க பண்ட் மேனேஜர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் வெளியானது. மேலும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து இந்நிறுவன பங்கின் விலை மளமளவென சரிவு கண்டு வருகிறது. அதேசமயம், இந்த குற்றச்சாட்டுக்களை இந்நிறுவனம் உறுதியாக மறுத்தது.

3 ஆண்டுகளில் 600% மேல் லாபம் கொடுத்த நகைக்கடை பங்குகள்.. ஆனா இப்ப அடி மேல் அடி..!

இந்த சூழ்நிலையில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் தனது நகை வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்தில் புதிதாக துணை நிறுவனம் ஒன்றை அமைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், இங்கிலாந்தில் எங்களுக்கு முழுமையான சொந்தமான துணை நிறுவனமான கல்யாண் கோல்ட் அண்ட் டயமண்ட் ஜூவல்லரி லிமிடெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 24.1.2025 அன்று பதிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பால், வரும் நாட்களில் இந்நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.445.80ஆக இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 284.65 சதவீத மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 603.76 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை சுமார் 41 சதவீதம் குறைந்துள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+