சென்னை: இந்தியாவின் முன்னணி நகைக்கடையாக விளங்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமான ஹைடெல் இன்வெஸ்ட்மெண்ட், தனது 2.36% பங்குகளை இந்நிறுவனத்தின் ப்ரோமோட்டருக்கு ரூ.1,300 கோடிக்கு விற்றுவிட்டு வெளியேறியுள்ளதாக ஆகஸ்ட் 21 அன்று பங்குச்சந்தை சமர்ப்பித்த அறிக்கையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனம், அந்த பங்குகளை விற்கும் போது அதிக லாபத்தைப் பெறும் நோக்கிலேயே விற்பனை செய்யும். இந்த நேரத்தில் நிறுவனத்தின் ப்ரோமோட்டரே பங்குகளை வாங்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் புதிய முதலீட்டாளரைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. வெளிநாட்டு நிறுவனத்திற்குப் பங்கு விற்பனை எளிதாக முடியும், ஆனால் பெரும்பாலான நேரத்தில் ப்ரோமோட்டர் வாங்குவது கிடையாது.

"ஹைடெல், தனது 2.42 கோடி பங்குகளை கல்யாண் ஜுவல்லர்ஸ் ப்ரோமோட்டரான திருக்குர் சிதாராம் ஐயருக்கு ஒரு பங்கை ரூ.535 என்ற விலையில் விற்பனை செய்துள்ளார், இது மொத்தம் ரூ.1,300 கோடிக்கு மதிப்புடைய பங்குகளாகும்" என்று கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பரிவர்த்தனைக்குப் பிறகு, கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் மற்றும் ப்ரோமோட்டர் குழுவின் பங்கு இருப்பு இந்நிறுவனத்தில் 60.59% இலிருந்து 62.95% ஆக உயர்ந்துள்ளது என்று கல்யாண் ஜுவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 21 அன்று, கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகப்படியாக 2.6% உயர்ந்து ரூ.556 அளவீட்டை எட்டியது, ஆனால் வர்த்தகம் முடியும் போது 1.27 சதவீதம் குறைந்து 548.15 ரூபாய்க்கு முடிந்துள்ளது. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து சரிந்ததைத் தொடர்ந்து இன்று கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் அதிகரித்தது.
BSE தரவுகளின்படி, கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனப் பங்குகள் வெறும் 365 நாட்களில் மல்டிபேக்கர் என்ற தகுதியை எட்டி கடந்த ஒரு வருடத்தில் 149.56% லாபத்தை இதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கியது, அதே சமயத்தில் சென்செக்ஸ் 24.06% உயர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனப் பங்குகள் 786.97% உயர்ந்துள்ளது.
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம், ஜூன் காலாண்டில் நிகர இலாபத்தில் 24% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.177 கோடியாக உள்ளது. மேலும் நிறுவனத்தின் வருவாய் 26.5% உயர்ந்து ரூ.5,535.5 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,375.7 கோடியாக இருந்தது.
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் தனது பங்கு இருப்பை அதிகரிப்பதன் மூலம் தனது ஆன்லைன் வர்த்தக தளமான கேண்டேரை பங்குகளை மொத்தமாகக் கைப்பற்றி முழு சொந்த துணை நிறுவனமாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவன தரவுகளின்படி, கல்யாண் ஜுவல்லர்ஸ்க்கு ஜூன் 2024 நிலவரப்படி இந்தியா முழுக்க 277 கடைகள் உள்ளது.


Click it and Unblock the Notifications