இந்தியாவின் பிரபல நகை விற்பனை நிறுவனத்தின் பங்கு மல்டிபேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நகை விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜூன் 28ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் தனது 52 வார உச்சமான 546 ரூபாயை எட்டியது.

முதன்முறையாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 50,000 கோடி என்ற அளவை எட்டியது. கடந்த 13 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 385 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை வழங்கியுள்ளது.
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 ஆகவும், புக் வேல்யூ 40.66 ஆகவும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டில் 14,109 கோடி ரூபாய் ஆகும். லாபம் 432 கோடியாகவும் இருக்கிறது.
நிறுவன பங்குகளில் 60 சதவீதம் புரமோட்டர்கள் வசம் உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் 21 சதவீத பங்குகளும் , மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 9.58 சதவீத பங்குகளும் கொண்டுள்ளன. இந்தியாவின் முக்கிய தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு வாங்கலாம் என்ற மதிப்பீட்டினை தந்துள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நகைகள் சில்லறை விற்பனை நிறுவனம் என்பதோடு மட்டும் இல்லாமல் 217 இடங்களில் இது கடைகளை வைத்து நடத்தி வருகிறது என மோதிலால் ஓஸ்வால் சுட்டிக்காட்டுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் கேஸ் ஃபுலோ என்பது அதிகரித்து அதன் கடன் அளவு குறையும் என கணித்துள்ளது. இந்த நிறுவனம் அண்மைக்காலமாக இளைஞர்களை கவரக்கூடிய வகையில் நகைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருவதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சி அடையும் என்றும் இதன் காரணமாக பங்கு மதிப்பு உயரும் என்றும் கூறியுள்ளது.
நகை தொழிலில் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையானது 2019 ஆம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 36 முதல் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2019 முதல் 2024ம் ஆண்டு வரை நகை சந்தை மொத்தமாக 8% என்ற காம்பவுண்டிங் வருவாயை வழங்கியுள்ளது மற்றும் இந்த சந்தை மதிப்பானது 6400 பில்லியன் என்ற அளவை எட்டியுள்ளது. வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப கல்யாண் ஜூவல்லர்ஸ் யுக்தியை மாற்றுவதால் அதன் வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தரகு நிறுவனம் கூறுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications