5 ஆண்டுகளுக்கு முன்பு பென்னி ஸ்டாக்காக இருந்த கௌசல்யா இன்ஃபிராஸ்டிரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்(Kaushalya Infrastructure Development Corp) நிறுவனத்தின் பங்கு தற்போது மல்டிபேக்கர் பங்காக மாறி முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை தந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெறும் 40 ரூபாயாக இருந்த கௌசல்யா இன்ஃபிராஸ்டிரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு தற்போது 1109 ரூபாய் என உயர்ந்துள்ளது. ஐந்தே ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு 2537% லாபத்தை தந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக இந்த நிறுவனம் நிதி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் சிறப்பாக செயல்பட்டு இருப்பதே இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு 441 % லாபம் தந்துள்ளது. கௌசல்யா நிறுவன பங்குகளை பொருத்தவரை கடந்த ஓராண்டு காலத்தில் 85 %, 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை 24 % வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஏழு மாத காலத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த நிறுவனத்தின் பங்கு வளர்ச்சியிலேயே இருந்துள்ளது.
கௌசல்யா நிறுவனம் கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு 1992 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களை நிறைவேற்றும் நிறுவனமாக இருக்கிறது. குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கட்டுமான மற்றும் ஹோட்டல் தொழிலிலும் இது ஈடுபட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் பல்வேறு நெடுஞ்சாலைகள், பாலங்கள், மற்றும் தொழிற்சாலைகள், நீர் பாசன திட்டங்கள் ,மற்றும் வீடு , வியாபாரங்களுக்கு தேவையான கட்டடங்களை கட்டுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கௌசல்யா நிறுவனத்தின் சந்தை மூலதனம் வெறும் 37 கோடி ரூபாய் தான், இதன் ஒரு பங்கின் ஃபேஸ் வேல்யூ 1000 என்ற அளவில் இருக்கிறது, புக் வேல்யூ 2109.95 ஆகும் இந்த நிறுவனத்தின் வருமானங்களை பொறுத்தவரை 2024 ஆம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் இதன் வருமானம் 17 கோடி ஆகும். லாபம் 14 கோடி ரூபாயாகவும் நிறுவனத்தின் நிகர மதிப்பு 57 கோடி ரூபாயாக இருக்கிறது.
இந்த நிறுவன பங்குகளில் 51% புரமோட்டோர்களிடமும் சில்லறை முதலீட்டாளர்களிடம் 48% பங்குகளும் இருக்கின்றன. இதனிடையே தரகு நிறுவனமான ஐசிஐசிஐ டைரக்ட், கௌசல்யா இன்ஃபிராஸ்டிரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது.
குறிப்பாக நிறுவனத்தின் நிதி நிலைமைகளை பார்க்கும் போது சீராக இருப்பதாக தெரிவிக்கிறது. இருந்தாலும் இந்த குறைந்த செயல்பாட்டு வருமானம் கொண்டிருப்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஐசிஐசிஐ டைரக்ட் கூறியுள்ளது.
story written by: Devika


Click it and Unblock the Notifications