இந்திய பங்குச்சந்தைகளில் சரியான நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்தால் பங்குச்சந்தை சரிவில் இருந்தாலும் நல்ல லாபம் பார்க்க முடியும். அப்படி ஒரு மல்டிபேக்கர் பங்கு குறித்து பார்க்கலாம்.
கேபிள் மற்றும் வயர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான KEI Industries பங்கு, கடந்த சில ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு அபாரமான லாபத்தை தந்துள்ளது. முன்னணி தரகு நிறுவனமான InCred Equities இந்த பங்கினை இப்போது வாங்கினாலும் லாபம் பார்க்கலாம் என பாசிடிவான பரிந்துரையை வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக KEI Industries பங்குகளின் விலை சரிவை சந்தித்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கு சுமார் 318% லாபத்தை வழங்கி முதலீட்டாளர்களுக்கு பலமடங்கு ஜாக்பாட் லாபம் தந்துள்ளது. அது மட்டுமில்லாமல் நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் மிக சிறப்பான நிதி செயல்பாடுகளை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்நிறுவனத்தின் லாபம் 28.94% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் ஆண்டு அடிப்படையில் 39% வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் வலுவான செயல்பாடுகள் சாதகமாக இருப்பதாகவும், இப்போதும் கூட முதலீடு செய்யலாம் என்றும் InCred Equities நிறுவனம் இந்த பங்கினை வாங்க ப்ரிந்துரை செய்துள்ளது.
ஆலை விரிவாக்கம், பல வகை தயாரிப்புகள் மூலம் லாப வரம்பு அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவை இந்த பங்கின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துவதாக இந்த தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்தாலும், துறைசார்ந்த போட்டி அதிகரித்து வருவது லாப வரம்புகளை சற்று பாதிக்கலாம் என இன்கிரிட் நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போது 3,725 ரூபாயாக இருக்கும் இதன் ஒரு பங்கு மதிப்பு, 5,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது தற்போதைய சந்தை விலையிலிருந்து சுமார் 29% வரை உயர்வை எட்டக்கூடும் என கணித்துள்ளது.
37,000 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட இந்த நிறுவனத்தில் 26% பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக இது உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

