குளோபல் ஹெல்த் ஐபிஓ.. முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

குளோபல் ஹெல்த் ஐபிஓ ஆனது நவம்பர் 3 அன்று தொடங்கிய நிலையில், இது நவம்பர் 7 அன்று முடிவடையவுள்ளது.

இந்த ஐபிஓ-வில் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இந்த பங்கு வெளியீட்டு தேதி நவம்பர் 3, - நவம்பர் 7, 2022

முகமதிப்பு - ஒரு பங்குக்கு ரூ.2 ரூபாய்

விலை - ரூ. 319 - 336

லாட் சைஸ் - 44 பங்குகள்

பங்கு வெளியீட்டின் மதிப்பு - ரூ.2205.57 கோடி

சில்லறை விற்பனை - 35% குறையாது

ஆங்கர் முதலீட்டாளர்கள்?

ஆங்கர் முதலீட்டாளர்கள்?

குளோபல் ஹெல்த் பொது பங்கு வெளியீட்டில் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 500 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்படவுள்ளது. இதன் மூலம் 5,07,61,000 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த வெளியீட்டில் விலை 319 - 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆங்கர் முதலீட்டாளார்கள் மூலம் 662 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ள நிலையில், இதன் அப்பர் பேண்ட் விலையுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 2206 கோடி ரூபாய் நிதியினை இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டுகிறது.

எதற்காக இந்த நிதி?

எதற்காக இந்த நிதி?

இந்த வெளியீட்டில் செய்யப்படும் புதிய பங்கு வெளியீடு மூலம் நிறுவனத்தின் கடனை திரும்ப செலுத்தவும், பொது கார்ப்பரேட் நோக்கத்திற்காகவும் செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கு வெளியீட்டில் இந்த பங்கினை வாங்கலாம் என அஷிகா ஆய்வு நிறுவனம், ஜியோத் உள்பட பல்வேறு தரகு நிறுவனங்களும் பரிந்துரை செய்துள்ளன.

நொய்டா மருத்துவமனை

நொய்டா மருத்துவமனை

தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் இந்த நிறுவனம் நொய்டாவில் கட்டமைப்பு பணியில் இருக்கும் மருத்துவனை 2025ல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் 2025ம் நிதியாண்டில் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 3500-ஐ தாண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளிக்கு உதவும் வகையில் இருக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு

ஐபிஓ-வில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலமாக பரிவர்த்தனை செய்ய கட் ஆப் நேரம் நவம்பர் 7, 2022, மாலை 5 மணி வரையில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் ஐபிஓவின் கடைசி நாளாகும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+