IPO: இன்று KFin டெக் ஐபிஓ.. ரூ.1500 கோடி திட்டம்.. முதலீடு செய்யலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஜிட்டல் ஃபைனான்ஷியல் சேவை நிறுவனமான KFin டெக்னாலஜிஸ் நிறுவனம் டிசம்பர் 19ம் தேதி தனது பொதுப் பங்கு வெளியீட்டை செய்யவுள்ளது. இது டிசம்பர் 21 அன்று முடிவடையவுள்ளது.

இது முழுக்க முழுக்க ஆஃபர் பார் விற்பனை மூலம் விற்பனை செய்யப்படும் ஒரு வெளியீடாகும்.

இதன் மூலம் ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் மட்டுமே விற்பனை செய்யவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 675 கோடி ரூபாய் திரட்டப்படவுள்ளது.

டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ

ஆஃபர் பார் சேல்

ஆஃபர் பார் சேல்

இந்த பங்கு விற்பனை மூலம் ஆஃபர் பார் சேல் மூலம் 2,37,75,215 ஈக்விட்டி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த வெளியீட்டில் ஒரு பங்கின் விலையானது ஒரு பங்குக்கு 347 - 366 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனையில் 40 பங்குகள் ஒரு லாட் ஆகும். நீங்கள் 40-க்கும் மேற்பட்ட பங்குகள் வாங்க வேண்டுமெனில், 40ன் மடங்கில் வாங்கிக் கொள்ளலாம்.

யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

உங்களின் பங்கு விலையானது முகமதிப்பு 10 ரூபாயாகும். இந்த பங்கு விற்பனையில் 75% தகுதி வாய்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதே நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கு நிதி கிடையாது
 

நிறுவனத்திற்கு நிதி கிடையாது

இந்த ஐபிஓ-வில் முழுவதும் ஆஃபர் பார் சேல் மூலம் செய்யப்படுவதால், நிறுவனத்திற்கு எந்த நிதியும் கிடைக்காது. இதன் மூலம் கிடைக்கும் நிதியானது முழுமையாக புரோமோட்டர் வசம் செல்லும்.

இது குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், கோடக் மகேந்திரா, ஜேபி மார்கன் இந்தியா, ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் மற்றும் ஜெஃபரீஸ் இந்தியா உள்ளிட்ட பலவும் இந்த இந்த பங்கு வெளியீட்டை நிர்வகிக்கவுள்ளன.

நிர்வாகம் எப்படி?

நிர்வாகம் எப்படி?

KFin டெக் இந்தியாவில் உள்ள முன்னணி நிதி சம்பந்தமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனமாகும். செப்டம்பர் 30 நிலவரப்படி நிறுவனம் 192 அசெட் மேனேஜர்களின் 301 பண்டுகளுக்கு சேவை அளித்து வருகின்றது.

கிரிசில் அறிக்கையின் படி, சேவை செய்யப்படும் AIF-களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 30% பங்கினை இந்த நிறுவனம் வகிக்கிறது.

நிதி நிலை அறிக்கை?

நிதி நிலை அறிக்கை?

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் விகிதம் 3537 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் நிகரலாபம் 853.45 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது கடந்த 2022ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் விகிதம் 6455.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 2021ம் நிதியாண்டில் 4861.98 மில்லியன் ரூபாயாக இருந்தது. இதன் வரிக்கு பிந்தைய லாபம் 1485.49 கோடி ரூபாயாகவும் இருந்தது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் 645.07 மில்லியன் ரூபாயாகவும் இருந்தது.

பங்கினை வாங்கலாமா?

பங்கினை வாங்கலாமா?

Prabhudas Lilladher Advisory Team இந்த பங்கினை நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய நிதி சேவை வழங்குனரான KFin, AMC அடிப்படையிலான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இது 41 AMC களில் 24 பேருக்கு KFin சேவை அளித்து வருகின்றது. சந்தை பங்கின் அடிப்படையில் பார்த்தால் 59% பங்கினை தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

KFin tech's Rs.1500 crore IPO opens on December 19, 2022: check key details here

KFin Technologies will do its IPO on December 19. It will end on December 21.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X