ஒன்னு வாங்கினா 2 இலவசம்! 5 வருடத்தில் 500% உயர்ந்த Kitex பங்குகள்.. உங்களிடம் இருக்கா இந்த பங்கு?

பொதுவாக பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் குறித்து எந்தவொரு நேர்மறையான அல்லது எதிர்மறையான தகவல்கள் வெளியானாலும் உடனடியாக குறிப்பிட்ட நிறுவன பங்கின் விலையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

உதாரணமாக, நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், வர்த்தக வளர்ச்சி மற்றும் போனஸ் அறிவிப்பு போன்ற நிறுவனம் தொடர்பான எந்தவொரு தகவல்கள் வெளிவந்தாலும் உடனடியாக அதன் தாக்கத்தை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் போது அந்நிறுவன பங்கின் விலையில் உணரலாம். அந்த வகையில், கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்ததையடுத்து நேற்று அந்நிறுவன பங்கின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

ஒன்னு வாங்கினா 2 இலவசம்! 5 வருடத்தில் 500% உயர்ந்த Kitex பங்குகள்.. உங்களிடம் இருக்கா இந்த பங்கு?

கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்க உள்ளதாக அறிவித்தது. அதாவது பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் 2 பங்கு போனஸ் பங்காக வழங்கப்படும் என தெரிவித்தது. இதற்கான பதிவு தேதி கடந்த 17ம் தேதியை குறிப்பிட்டு இருந்தது.

போனஸ் பங்கு அறிவிப்பின் எதிரொலியாக கடந்த திங்கட்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்து அப்பர் சர்க்கியூட்டை அடித்தது. அன்று மும்பை பங்குச் சந்தையில் கிடெக்ஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து ரூ.256.35ஆக உயர்ந்தது.

நடப்பு 2025 ஜனவரி மாதத்தில் இதுவரை கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் 3 மாதத்தில் இப்பங்கு விலை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 500 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து கடந்த சில காலாண்டுகளாக ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 2024 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.190 கோடியும், நிகர லாபமாக சுமார் ரூ.30 கோடியும் ஈட்டியிருந்தது.

மேலும், கிடெக்ஸ் காா்மெண்ட்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.216 கோடி ஈட்டியிருந்தது. மேலும் அந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.40 கோடியும் சம்பாதித்து இருந்தது. முந்தைய ஜூன் காலாண்டைக் காட்டிலும் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.69 சதவீதம் குறைந்து ரூ.246.90ஆக இருந்தது.

Story written by: Subramanian

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+