சென்னை: கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் இன்று (ஏப்ரல் 25, 2024) பங்குச்சந்தையில் அதிகபட்சமாக 10% வரை சரிந்து ரூ.1,659 க்கு சரிந்து அதன் முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆர்பிஐ புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் கோடக் மஹிந்திரா வங்கி அடுத்து உத்தரவு வரும் வரையில் இவ்வங்கி ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி சேனல்கள் வழியாக புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என்றும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க கூடாது என்ற முக்கியமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கியின் டெக் தளத்தில் கண்காணிப்பு தொடர்பான பிரச்சனைகளைக் காரணம் காட்டி ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதேபோல் ஆர்பிஐ கடந்த 2 வருடமாக இவ்வங்கியின் ஐடி தளத்தை ஆய்வு செய்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தனியார் கடன் வழங்குநரான கோடக் மஹிந்திரா வங்கி கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளைத் தனது ஐடி கட்டமைப்பில் கடைப்பிடிக்கத் தவறியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதையடுத்து, முதலீட்டாளர்கள் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகளை விற்பனை செய்ததன் விளைவே இன்று 10 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வங்கியில் இருந்து உதய் கோடக் வெளியேறிய பின்பு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை இது.
ஆர்பிஐயின் இந்த தடை நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கிக்குக் குறுகிய காலத்திலும், நடுத்தர காலத்திலும் வர்த்தகம் மற்றும் பங்கு மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், வங்கியின் வளர்ச்சி, net interest margin (NIM) மற்றும் கட்டண வருமானத்தையும் பாதிக்கும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய ரீடைல் வாடிக்கையாளர்களை இணைக்க கோடக் மஹிந்திரா வங்கி டிஜிட்டல் தளங்களை அதிகம் நம்பியிருக்கும் வேளையில் ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதில் (cross-selling) பெரும் தடையாக இருக்கும் என்று பங்கு தரகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, பல பங்குதரகர் நிறுவனங்கள் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகளின் டார்கெட் விலையை குறைத்துள்ளன.
உதாரணமாக, 'hold' என்ற மதிப்பீட்டைக் அளித்துள்ளது Jefferies நிறுவனம், கோடக் மஹிந்திரா பங்குகளின் இலக்கு விலையை ரூ.2,050 இல் இருந்து ரூ.1,970 ஆக குறைத்துள்ளது. இதேபோல், Emkay Global நிறுவனமும் இலக்கு விலையை ரூ.1,950 இல் இருந்து ரூ.1,750 ஆகக் குறைத்துள்ளது.
இதனிடையே, டார்கெட் விலையைக் குறைக்காத Macquarie நிறுவனம் கூட, "ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை கோடக் மஹிந்திரா வங்கிக்கு பெரும் பின்னடைவு" என்று ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் வங்கித்துறை முதலீட்டாளர்களும், கோடக் மஹிந்திரா முதலீட்டாளர்களும் உஷாராக செயல்படுவது அவசியம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications