பல லட்சம் கோடிகளுக்கு சந்தை மூலதனத்தை கொண்டிருக்கக் கூடிய நிறுவனங்களின் பங்குகளை லார்ஜ் கேப் பங்குகள் என அழைக்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை லார்ஜ் கேப் பங்குகள் என கூறலாம்.
லார்ஜ் கேப் பங்குகள் பங்குச்சந்தையில் நிலையான ஒரு வளர்ச்சியை பெரும் ஆனால் மிகப் பெரிய அளவு வளர்ச்சியை பெறாது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இருந்தாலும் லார்ஜ் கேப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாபத்தை தரக்கூடியவை ஆகவே இருக்கின்றன. அதாவது பங்குச்சந்தை சரியும் போது இவற்றின் மதிப்பு குறைந்தாலும் , பங்குச்சந்தை ஏறும் போது உடனடியாக இவற்றின் மதிப்பும் உயர்ந்துவிடும்.

குறைந்த அளவு சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்களின் பங்குகளை ஸ்மால் கேப் பங்குகள் என அழைக்கிறோம். இத்தகைய பங்குகள் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக காணப்படும். திடீரென ஒரு ஸ்மால் கேப் நிறுவனத்தின் பங்கு உச்சத்திற்கு செல்லலாம் அல்லது மிக வேகமாக சரிவையும் சந்திக்கலாம். எனவே தான் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என முதலீட்டு துறை நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
2025ஆம் நிதியாண்டை பொறுத்தவரை ஸ்மால் கேப் நிறுவனங்களோடு ஒப்பிடும்போது இந்தியாவில் லார்ஜ் கேப் நிறுவனங்கள் தான் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளன என Equirus Securities என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் 270 நிறுவனங்களின் பங்குகளை ஆய்வு செய்து இந்நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
அதில் 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய பங்குச் சந்தை பல்வேறு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சூழலிலும் லார்ஜ் கேஒ நிறுவனங்கள்தான் சிறப்பாக செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு வளர்ச்சியை தந்துள்ளது என தெரிவித்துள்ளது. அதாவது இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள லார்ஜ் கேப் நிறுவனங்களை பொறுத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஆறு சதவீதம் வரை அவற்றின் வருமானம் வளர்ச்சி அடைந்திருக்கிறதாம்.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்தியாவில் லார்ஜ் கேப் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வருமானம் 6 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது, மிட் கேப் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வருமானம் 2 சதவீதமாக இருந்திருக்கிறது , ஸ்மால் கேப் நிறுவனங்களின் வருமானம் என்பது மைனஸ் 16 சதவீதம் என பெரும் சரிவை சந்தித்திருக்கிறதாம்.
எனவே பெரும்பாலான முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளை நோக்கியே சென்றனர் என குறிப்பிட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப முதலீடுகளை தகவமைத்து கொண்டனர் என்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களுக்கு பதிலாக லார்ஜ் கேப் நிறுவனங்களை நோக்கி பயணம் செய்து வருகின்றனர் என்றும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக லார்ஜ் கேப் பிரிவில் சில்லறை விற்பனை பிரிவில் ஈடுபட கூடிய நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், மூலதன சரக்குகள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல வளர்ச்சி பெற்று இருப்பதாக தெரிவித்திருக்கிறது . 2026 ஆம் நிதி ஆண்டை பொருத்தவரை பாதுகாப்புத்துறை, உலோகம், ரசாயனம் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications