லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஐபிஓ முடிந்து இன்று அதிகாரப்பூர்வமாக பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும், பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் லென்ஸ்கார்ட் பங்குகள் NSEயில் ஒரு பங்கு விலை ரூ.390க்கு பட்டியலிடப்பட்டன.
இது லென்ஸ்கார்ட் ஐபிஓ வெளியீட்டு விலையான ரூ.402க்கு 3 சதவீத குறைவான விலையாகும். 2025ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட IPOகளில் ஒன்றான இது, ஏமாற்றத்துடன் தொடங்கியது, அதன் ஐபிஓ முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லென்ஸ்கார்ட் நிறுவனம் சுமார் ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட்டது, முதல் நாள் வர்த்தகத்தில் 356.10 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் சந்தை மதிப்பிலும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. லென்ஸ்கார்ட் பங்குகள் கிரே மார்க்கெட் பிரீமியம் விலையில் ரூ.108லிருந்து பூஜ்ஜியமாக வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசமான சரிவுக்கு 3 முக்கிய காரணங்களை சந்தை ஆய்வாளர்களும், நிறுவனங்களும் முன் வைக்கிறது.
உயர் மதிப்பீடு பிரச்சனை
லென்ஸ்கார்ட் இந்த ஐபிஓ-வில் அப்பர் பேன்ட் விலையாக ரூ.402 விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் இந்த விற்பனைக்கும், நிறுவன மதிப்புக்கும் 10.1 மடங்கு அதிகமாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதேபோல் EBITDA மதிப்புக்கும் நிறுவன மதிப்புக்கும் 68.7 மடங்கு வித்தியாசம் உள்ளது. இது சந்தையில் இருக்கும் டைட்டன், டிரெண்ட், நைகா போன்ற நிறுவனங்களை விட அதிகம்.
SBI செக்யூரிட்டீஸ், "நிறுவனத்தின் மதிப்பீடு அதிகமாக உள்ளதே ஐபிஓ லிஸ்ட்டிங்-ல் லாபம் குறைவாக இருக்க காரணம்" என்று எச்சரித்தது. ஆனால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைத்ததுள்ளது.
ஒரு முறை லாபம் பிரச்சனை
லென்ஸ்கார்ட் 2025ஆம் நிதியாண்டில் ரூ.6,653 கோடி வருவாயில் ரூ.297 கோடி லாபம் பெற்றுள்ளது. 2023ஆம் நிதியாண்டில் ரூ.64 கோடி இழப்பில் இருந்து பெரும் லாபத்தை பதிவு செய்துள்ளது.
ஆனால் இந்த லாபத்தில் ரூ.167 கோடி Owndays கையகப்படுத்தல் மூலம் கிடைத்த ஒரு முறை லாபத்தின் பங்கீடு முக்கியமாக உள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் உண்மை லாபம் ரூ.130 கோடி மற்றும் 1.9 சதவீத மார்ஜின் மட்டுமே பதிவாகியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் 2026ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,940 கோடி வருவாயில் ரூ.55.6 கோடி லாபம் பதிவு செய்துள்ளது இதில் 2.8 சதவீத மார்ஜின் பதிவு செய்துள்ளது.
முதலீட்டாளர் எச்சரிக்கை
இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் சமீப காலமாக புதிய டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் மீதான IPO ஆர்வம் குறைந்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்ட பின்பு பங்கு விலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, இந்த அச்சத்தின் காரணமாகவும், பல ரீடைல் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
லென்ஸ்கார்ட் ஐபிஓ-வில் 28 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன், நிறுவன முதலீடுகள் 45 மடங்கு விருப்பம் இருந்த போதிலும் பட்டியலிடப்படும் நாளில் சந்தை மனநிலை மாறியது. உயர் மதிப்பீடு, எதிர்மறை கருத்துக்கள் முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது.
இந்த மூன்றும் தான் லென்ஸ்கார்ட் ஐபிஓ-வின் மந்தமான லிஸ்டிங் விலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. 11.40 மணியளவில் லென்ஸ்கார்ட் பங்குகள் அதன் ஐபிஓ அப்பர் பேன்ட் விலையான 402 ரூபாயை கடந்து 409.90 அளவீட்டை எட்டியுள்ளது, இதன் மூலம் கிட்டத்தட்ட 3.90 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications