Lenskart ஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆசையா.. முதலில் இதை படிங்க..!

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதுநாள் வரையில் தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி நாடு முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வந்த நிலையில் தற்போது முதலீட்டை திரட்டுவது கடினமாகியுள்ளது. இதேவேளையில் இந்திய ஸ்டார்ட்அப் துறையில் முதலீடு செய்வர்கள் வெளியேற ஆர்வம் காட்டி வரும் காரணத்தால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு மக்களிடம் நேரடியாக முதலீட்டை திரட்டும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

பேடிஎம், சோமேட்டோ முதல் பல நிறுவனங்கள் ஐபிஓ மூலம் முதலீட்டை திரட்டி வெற்றிக்கண்டுள்ள வேளையில் தற்போது பிற நிறுவனங்களும் முதலீட்டை திரட்டுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லென்ஸ்கார்ட் நிறுவனம் செபி அமைப்பிடம் ரூ.2,150 கோடி புதிய பங்கு வெளியீடு மற்றும் 13.2 கோடி பங்குகளை OFS வாயிலாக விற்பனை செய்ய DRHP ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.

லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன்பு முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் ஆபத்து காரணிகளை கட்டாயம் கவனிக்க வேண்டியுள்ளது.

Lenskart ஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆசையா.. முதலில் இதை படிங்க..!

லென்ஸ்கார்ட்: நஷ்டம் டூ லாபம்
இந்நிறுவனம் 2024 ஆம் நிதியாண்டில் ரூ.10.2 கோடி நஷ்டத்தில் இருந்த வேளையில், 2025 ஆம் நிதியாண்டில் ரூ.297.3 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் ரூ.6,652.5 கோடியாக உயர்ந்து, கடந்த ஆண்டை விட 22.5% அதிகரித்துள்ளது. மேலும் EBITDA அளவு ரூ.302 கோடியிலிருந்து 2024 ஆம் நிதியாண்டில் ரூ.763 கோடி வரை உயர்ந்து, 2025-இல் ரூ.1,115 கோடியை எட்டியுள்ளது. இதோடு மார்ஜின் அளவுகள் மூன்று ஆண்டுகளில் 8% முதல் 17% வரை மேம்பட்டுள்ளன.

லென்ஸ்கார்ட் பிஸ்னஸ்:
லென்ஸ்கார்ட் நிறுவனத்திற்கு மொத்தம் 2,723 கடைகள் உள்ளன, இதில் 2,067 கடைகள் இந்தியாவிலும், 656 கடைகள் வெளிநாடுகளிலும் உள்ளது. மேலும் 10 கோடிக்கும் அதிகமான ஆப் டவுன்லோடுகள் கொண்டிருக்கும் காரணத்தால் ஆன்லைன் வாயிலாகவும் அதிகளவிலான வர்த்தகத்தை நேரடியாக பெற்று வருகிறது.

லென்ஸ்கார்ட்-ன் இந்திய வாடிக்கையாளர்களில் சுமார் 98% பேர் கடந்த 2 வருடத்தில் மீண்டும் மூக்கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளனர். இதன் மூலம் இந்நிறுவனத்தின் சக்சஸ் ரேட் யாரும் தொட முடியாத அளவுக்கு உள்ளது. இப்போ விஷயத்திற்கு வருவோம்.

லென்ஸ்கார்ட் IPO ஆபத்துகள் மற்றும் சவால்கள்:
லென்ஸ்கார்ட் அதிவேக வளர்ச்சியை அடைந்தாலும், லென்ஸ்கார்ட் சில ஆபத்துகள் உள்ளது. இந்நிறுவனம் அதன் ஒட்டுமொத்த இந்திய வர்த்தகத்திற்கு பிகிவாடி மற்றும் குர்கிராம் தொழிற்சாலைகளை மட்டுமே நம்பியுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் லென்ஸ்கார்ட்-ன் உற்பத்தி டூ விநியோகம் மொத்தமும் பாதிக்கும் என மனிகன்ட்ரோல் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது.

இந்த பிரச்சனையை களையவே லென்ஸ்கார்ட் நிர்வாகம் தெலங்கானாவில் ரூ.1,500 கோடி முதலீட்டில் புதிய லென்ஸ் உற்பத்தி ஆலை அமைக்க இம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்த மாபெரும் தொழிற்சாலையில் சுமார் 2,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டாலும், இத்தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டமிடல் மற்றும் கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குர்கிராம் தொழிற்சாலையில் பாதிப்பு ஏற்பட்டால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு ரூ.345.9 கோடி கடனை செலுத்துவதில் பாதிப்பு ஏற்படலாம். இதேபோல் வர்த்தக விரிவாக்கம், கடைகள் எண்ணிக்கை உயர்த்துவதற்கு மாறு நிதி ஆதாரத்தை தேட வேண்டிய கட்டாயம் உள்ளது எனவே இதை கருத்தில் கொண்டு லென்ஸ்கார்ட் ஐபிஓ-வில் முதலீடு செய்ய வேண்டும்.

ஐபிஓ நிதி பயன்பாடு:
இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் ரூ.2,150 கோடி தொகையில், லென்ஸ்கார்ட் தனது கடை எண்ணிக்கையை விரிவுபடுத்தவும், தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய மற்றும் பிராண்டை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சம்பளம்:
லென்ஸ்கார்ட் நிறுவனர் பெயுஷ் பன்சால் வருடத்திற்கு ரூ.6 கோடி ஊதியம், இணை நிறுவனர்கள் நேகா மற்றும் அமித் தலா ரூ.3 கோடி பெற்று வருகின்றனர். இந்த புதிய சம்பள முறை 2025 ஏப்ரல் 1-இல் அமலுக்கு வந்தது. மேலும் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருப்பவர்கள் 30 முதல் 42 லட்சம் வரையில் சம்பாதிக்கின்றனர்.

முக்கிய முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை:
வழக்கம் போல் எந்தொரு ஐபிஓ ஆக இருந்தாலும், ப்ரோமோட்டர்கள், ஆரம்பக்கட்ட முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வது இயல்பு. இதேபோல் லென்ஸ்கார்ட்டின் ஆரம்பகால முதலீட்டாளர்களான சாப்ட்பேங்க், டெமாசெக், பிரெஞ்சி இன்வெஸ்ட் மற்றும் ADIA போன்ற பிரபல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பணமாக்க முடிவு செய்து இந்த ஐபிஓ-வில் பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.

இதேபோல் இந்த ஐபிஓ-வில் லென்ஸ்கார்ட் தலைமை நிறுவனர் பெயுஷ் பன்சால் 2 கோடி பங்குகளையும், இணை நிறுவனர்கள் நேகா பன்சால், அமித் சௌதரி மற்றும் சுமித் கபாஹி தலா 28.7 லட்சத்திலிருந்து 57.4 லட்சம் பங்குகளை விற்க உள்ளனர்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+