நிறுவனங்கள் பணம் திரட்டுவதற்கான பிரபலமான இடமாக இந்தியா மாறி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் டிவி முதல் வாசிங் மெஷின் வரையிலான வீட்டு உபயோக பொருட்களின் எலக்ட்ரானிக் கொரியன் பிராண்ட் ஆன எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் தனது இந்திய யூனிட்டை பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. தென் கொரிய நிறுவனமான எல்ஜி அதன் ஐபிஓ வெளியீட்டில் ஆக்சிஸ் கேபிட்டலை வங்கியாளராக நியமித்துள்ளது. எல்ஜி $1.5 பில்லியன் வரை திரட்ட இலக்கு வைத்துள்ளது. ஐபிஓ அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக, தென் கொரிய நிறுவனங்கள் மும்பை பங்கு சந்தையில் விற்பனையில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் எல்ஜி இந்திய வங்கியைத் தேர்ந்தெடுத்துள்ளது. பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்., சிட்டிகுரூப் இன்க்., ஜே.பி.மோர்கன் சேஸ் & கோ. மற்றும் மோர்கன் ஸ்டான்லி உள்ளிட்ட வங்கிகளை எல்ஜி நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறக்கூடிய ஐபிஓவிற்கான ஏற்பாட்டாளர்களாக நியமித்துள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செப்டம்பரில் தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது ஆக்சிஸ் கேபிட்டலை நியமித்துள்ளது.

பங்கு விற்பனையிலிருந்து எல்ஜி $1 பில்லியன் முதல் $1.5 பில்லியன் வரை திரட்டும் எனவும், இதன் மூலம் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சுமார் $13 பில்லியன் மதிப்பீட்டை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் வருவாயை 75 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக ஐபிஓ வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 2023ம் ஆண்டு 65 பில்லியன் டாலராக இருந்தது. நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து வருவாயை அதிகரிப்பது, விற்பனையை 45 சதவிகிதம் உயர்த்துவது என பல்வேறு திட்டங்களை இந்நிறுவனம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எல் ஜி நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்த பல்வேறு உத்திகள் வைத்துள்ளதாகவும், அதில் ஒன்று ஐபிஓ வெளியீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது. இதன் மூலமாக எல் ஜி நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே மக்களின் நம்பிக்கைக்கு உரிய பிராண்டாக எல்ஜி உள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதம் உயர்ந்து 2.87 டிரில்லியன் உயர்ந்துள்ளது. மேலும் நிகர வருமானம் 27 சதவீதம் அதிகரித்து 198.2 பில்லியன் ஆக உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெற முற்படுவதால், பங்கு மூலதனச் சந்தைகள் மூலம் நிதி திரட்டுவதற்கான ஹாட்ஸ்பாட் ஆக இந்தியா மாறியுள்ளது. இந்த ஆண்டு ஆசியாவின் மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு ஐபிஓக்கள் மற்றும் இரண்டாம் நிலை சலுகைகள் மூலம் நாட்டில் சுமார் $49 பில்லியன் திரட்டப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் தொகுத்த தரவு காட்டுகிறது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் அக்டோபர் மாதத்தில் 3.3 பில்லியன் டாலர் பங்கு விற்பனையானது நாட்டின் மிகப்பெரிய சாதனையாக இருந்தது.
இதற்கிடையில், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ள சில நிறுவனங்களில் ஸ்விக்கி, எச்டிஎஃப்சி ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் Carraro SpA ஆகியவை உள்ளன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications