முகேஷ் அம்பானியின் 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிதி நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் திங்கள்கிழமையன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் காத்திருந்தவர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பாகக் கருதப்பட்டது.
ரிலையன்ஸ் குழுமத்தின் அனைத்து பங்குகளுமே அதன் பங்குதாரர்களுக்கு கொழுத்த லாபத்தைத் தான் ஈட்டி வருகின்றது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவர்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு இணையாக ரிலையன்ஸ் பைனான்சியல் சர்வீஸஸ் பங்குகள் கிடைக்கும்.

தனது முதல் டிரேடிங் செஷனில் ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் லோயர் சர்க்கியூட்டை தொட்டது. அதன் வரையறுக்கப்பட்ட விலையான ரூ.261.85இல் 1 சதவீதம் கூடுதல் பிரீமியத்துடன் அந்தப் பங்கு ரூ.265க்கு பட்டியலிடப்பட்டது.
பெரிதாக நல்ல தொடக்கம் என்று சொல்ல முடியாவிட்டாலும் லைப் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா- எல்ஐசி முகேஷ் அம்பானியின் இந்த நிறுவனத்தில் 6.66 சதவீதப் பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

எல்ஐசியின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் இடையே பெருத்த ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் எல்ஐசி 6.49 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்தாண்டு தனது பைனான்சியல் சர்வீஸ் தொழிலில் இருந்து ஜியோ பைனான்சியல் சர்வீஸஸை பிரிப்பதாக அறிவித்தது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி இந்த பிரிக்கப்பட்ட பைனான்சியல் சர்வீஸஸின் போர்டுக்கு சுதந்திரமான இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் போர்டு ரூ.10 முகப்பு விலையில் 635.32 கோடி பங்குகளை தகுதிபடைத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்காக ஒதுக்கியது. ஜூலை 20 ஆம் தேதிப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்கள் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு சமமாக ஒரு பங்கை ரிலையன்ஸ் பைனான்ஸ் சர்வீஸஸில் பெற்றனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்கு இது சரியான அதிர்ஷடமாகும். சிரமப்படாமல் லாபம் அடைந்துள்ளனர்.
ஜியோ பைனான்சியல் பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து அதாவது தொடர்ந்து 3 நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது, அதுவும் லோவர் சர்கியூட் அளவான 5 சதவீதத்தில். ஜியோ பைனான்சியல் பங்குகள் 265 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது 227.25 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. பட்டியலிடப்பட்ட நாளில் 287.20 ரூபாய் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications