லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) ஆப் இந்தியா, ஐஆர்சிடிசி-யில் தனது பங்கு விகிதத்தினை அதிகரித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு, சிறந்த பங்கு சந்தை முதலீட்டாளரும் ஆகும்.
இந்த நிறுவனம் ஐஆர்சிடிசி-யில் இருந்த 5.005% பங்கினை 7.278% ஆக அதிகரித்துள்ளது. இது மற்ற முதலிட்டாளர்களையும் பங்கினை வாங்க தூண்டலாம். இது மேற்கொண்டு இந்த பங்கு விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
எல்ஐசி-1,81,80,323 பங்குகளை அதிகரித்த நிலையில், 5,82,22,948 பங்குகளாக அதிகரித்தது. அக்டோபர் 17 முதல் டிசம்பர் 16 வரையில் திறந்த சந்தை மூலம் ஒபன் மார்கெட் மூலம் ஐஆர்சிடிசி-யில் கூடுதல் பங்குகளை எல்ஐசி வாங்கியது.
ஐஆர்சிடிசி நிறுவனம் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றது. குறிப்பாக ரயில் நீர் பிளான்ட் திறன், புதிய ரயில்கள், சில கட்டணம் அதிகரிப்பு என பல வளர்ச்சிகளுக்கு மத்தியில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கின் விலை அதிகரிக்கலாம்
ஐஆர்சிடிசி நிறுவனத்தின் வருவாய் விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறையில் போட்டிகள் என்பதும் மிக மிக குறைவு. தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் இந்த துறையில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
முக்கிய சப்போர்ட்
டெக்னிக்கலாக இப்பங்கின் விலையானது முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 660 ரூபாயினை எட்டலாம் என கணித்து வருகின்றனர். இந்த லெவலில் ஹோல்டு செய்தால் , இங்கிருந்து இப்பங்கின் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய லெவல் ஆக 700 - 725 ரூபாயாக கணித்துள்ளனர். எனினும் 660 ரூபாயினை உடைத்தால் மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மென்ட் ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது.
முக்கிய வருவாய் பகுதிகள்
ஐஆர்சிடிசி நிறுவனம் முழுக்க முழுக்க இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாகும். தற்போது ஐஆர்சிடிசி ஒரு நாளில் 1.1 மில்லியன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறது. இதே கேட்டரிங் அடிப்படையில் 35000 உணவுகளையும் விற்பனை செய்து வருகின்றது. இதன் ரயில் நீர் பிரிவானது கொரோனாவுக்கு முந்தைய வருவாயினை எட்டியது. இது ஒரு நாளைக்கு 1.55 மில்லியன் பாட்டில்கள் உற்பத்தி செய்கிறது. தொடர்ந்து அதன் திறனை விரிவாக்கம் செய்தும் வருகின்றது.
அரசின் திட்டம்
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு 5% பங்கினை மத்திய அரசு விற்பனை செய்யப் போவதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஐ ஆர் சி டி சி பங்குகள் சரிவினைக் கண்டு வருகின்றன. இதன் மூலம் மத்திய அரசு தன் வசம் உள்ள 4 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
முதலீடு அதிகரிக்கலாம்
போட்டியில்லாத இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான், ஐ ஆர் சி டி சியில் தனது பங்கு விகிதத்தினை எல்ஐசி அதிகரித்திருக்கலாம் எனலாம். இது மேற்கோண்டு மற்ற முதலீட்டாளர்களையும் இப்பங்கினில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம்.


Click it and Unblock the Notifications