மும்பை: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்து முதலீடு செய்வதில் எல்ஐசி நிறுவனம் ஜாம்பவானாக இருக்கிறது. அந்த வகையில் எல்ஐசி நிறுவனம் எந்த நிறுவனத்தில் நிறுவனத்தில் தன்னுடைய பங்கினை அதிகரிக்கிறது எந்த நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்கிறது என பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து உற்று நோக்குவார்கள்.
2025 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் எல்ஐசி நிறுவனம் தன்னுடைய ஈக்விட்டி போர்ட்போலியோவில் கணிசமான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களில் தன்னுடைய பங்கினை எல்ஐசி நிறுவனம் அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ, இன்போசிஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களில் தன்னுடைய பங்கினை குறைத்து இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்ஐசி 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஈக்விட்டி போர்ட்போலியோவை கொண்டு இருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனம் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தன்னுடைய பங்கு மதிப்புகளை அதிகரித்து குறிப்பிட்ட சில நிறுவனங்களில் குறைத்து இருக்கிறது.
தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 81 நிறுவனங்களில் எல்ஐசி தன்னுடைய பங்கினை அதிகரித்துள்ளது ,அதேபோல 82 நிறுவனங்களில் தன்னுடைய பங்கினை குறைத்து இருக்கிறது. எல்ஐசி நிறுவனத்தின் ஈகிவிட்டி போர்ட்போலியோவின் மதிப்பு மார்ச் உடன் முடிந்த காலாண்டில் 0.7 சதவீதம் குறைந்துள்ளது .
எல்ஐசி நிறுவனம் 2.95 கோடி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கி இருக்கிறது இதற்காக இந்த நிறுவனம் 3,690 கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறது. எல்&டி நிறுவன பங்குகளை 2978 கோடி ரூபாய்க்கும் , ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகளை 2,472 கோடிக்கும் வாங்கி இருக்கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகளை 1948 கோடி ரூபாய்க்கு வாங்கி வைத்திருக்கிறது. 2.23 கோடி டாடா மோட்டார்ஸ் பங்குகளை 1570 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கு மதிப்பு 8.9% சரிவடைந்த போதிலும் எல்ஐசி அதனை வாய்ப்பாக கருதி பங்கினை அதிகரித்துள்ளது.
பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்திலும் 1631 கோடி ரூபாய்க்கு எல்ஐசி நிறுவனம் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியில் தன் வசம் இருந்த பங்குகளில் பங்குகளை 2006 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. இன்போசிஸ் ,டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் இருந்த பங்குகளையும் 4460 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. அதேபோல எல்ஐசி நிறுவனம் பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்களில் தன் வசம் இருந்த பங்குகளையும் குறைத்து இருக்கிறது.
எல்ஐசி நிறுவனம் தன்னுடைய போர்ட்போலியோவில் எரிசக்தி மற்றும் நிதி சேவைகள் சார்ந்த துறைகளில் அதிக முதலீடு செய்திருக்கிறது. கமாடிட்டிஸ் பிரிவிலும் அதிக ஒதுக்கீடு செய்துள்ளது. பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார சூழல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எல்ஐசி நிறுவனம் தன்னுடைய முதலீடுகளை மாற்றி அமைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications