டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் பங்கினை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் அதிகரித்துள்ளது.
எல்ஐசிஇந்த பங்கு பரிவர்த்தனை மூலம் 7.7% ஆக அதிகரித்து, 33.86 லட்சம் பங்குகளை ஒபன் மார்கெட் மூலம் வாங்கியுள்ளது.
இது முன்னதாக எல்ஐசி நிறுவனம் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தில் 5.65% பங்குகளை வைத்திருந்தததாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் + LIC
ஜூன் 15, 2022 மற்றும் செப்டம்பர் 30-க்கு இடையிலான காலகட்டத்தில் எல்ஐசி DRLன் 33,86,486 பங்குகளை வாங்கியுள்ளது. இதனையடுத்து தான் தற்போது எல்ஐசி வசம் 7.7% பங்குகள் உள்ளது.
இது டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் பங்கினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று என் எஸ் இயில் 1.94% அதிகரித்து, 4419.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 4439 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 4312.40 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.99% அதிகரித்து, 4420.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 4438.65 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 4270.95 ரூபாயாகும். இதே இப்பங்கின் 52 வார உச்ச விலை 5078.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3655 ரூபாயாகும்.
மற்ற ஹோல்டிங் பங்குகள்
எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு, சிறந்த முதலீட்டாளராகவும் இருந்து வருகின்றது. பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட், எம்பசிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் அடங்கும். எனினும் இந்த பங்குகளில் எவ்வளவு விகிதம் உள்ளது என பங்கு சந்தைக்கு இரண்டாவது காலாண்டு முடிவு அப்டேட் செய்யும்போது தெரிய வரலாம்.
ஐபிஓவில் இருந்து சரிவு
சமீபத்தில் பங்கு சந்தைக்குள் முதலீடு செய்து வரும் எல்ஐசி, சமீபத்தில் தான் பங்கு சந்தையில் நுழைந்தது. எனினும் பங்கு சந்தையில் நுழைந்ததில் இருந்தே சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் பங்கு சந்தை வெளியீட்டு விலை 949 ரூபாயாகும். இன்று வரையில் இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 617 ரூபாயாகும்.
எல்ஐசி நிலவரம் என்ன?
எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று என் எஸ் இயில் 0.17% குறைந்து, 620.6 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 625 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 619.25 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 0.12% குறைந்து, 620.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 624.95 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 619.30 ரூபாயாகும். இதே இப்பங்கின் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 617 ரூபாயாகும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications