சமீபத்திய காலமாக அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலைகள் உச்சம் தொட்டு வருகின்றன. எனினும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்யத் தயங்கி வருகின்றன.
ஆனால் பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி ஒரு சிறந்த முதலீட்டாளரும் கூட.
எல்ஐசி நிறுவனம் கடந்த செப்டம்பர் 2020 காலாண்டில் இருந்து தொடர்ச்சியாக அதானி குழும பங்குகளில் முதலீடுகளில், முதலீட்டினை அதிகரித்து வருகின்றது.
அதானி குழுமம் வசம்
அதானி குழும நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்களில் 4 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அவற்றில் ஒன்றில் கிட்டதட்ட ஆறு மடங்கு முதலீட்டினை அதிகரித்துள்ளது.
இது குறித்து அதானி குழும நிறுவனங்கள் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், எல் ஐ சி நிறுவனத்தின் வசம், இன்றைய நாளில் 74,142 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 18.98 லட்சம் கோடி ரூபாயாகும். அதானியின் வசம் உள்ள 3.9% பங்குகளாகும்.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4,46,299 கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பர் 2020 காலாண்டில் 1% மேலாக இருந்த பங்கானது, செப்டம்பர் 2022ல் 4.02% ஆக இருந்தது. இதே மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் 0.82% ஆக இருந்த பங்கானது, செப்டம்பர் 2022ல் 1.27% ஆக அதிகரித்துள்ளது.
அதானி டோட்டல் கேஸ்
அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 3,97,614 கோடி ரூபாயாக உள்ளது. இது செப்டம்பர் 2020ல் 1% மேலாக இருந்தது. இது 2022 செப்டம்பர் காலாண்டில் 5.77% ஆக அதிகரித்துள்ளது.
இதே மியூச்சுவல் ஃபண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் செப்டம்பர் 2020ல் 0.82% ஆக இருந்த பங்கு விகிதம், செப்டம்பர் 2022ல் 1.27% ஆக அதிகரித்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி
அதானி கிரின் எனர்ஜி சந்தை மதிப்பானது 3,34,642 கோடி ரூபாயாக உள்ளது. இது செப்டம்பர் 2020ல் 1% மேலாக உள்ளது. இது செப்டம்பர் 2022ல் 1.15% ஆக அதிகரித்துள்ளது. இதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 0.11%ல் இருந்து, செப்டம்பர் 2022ல் 0.11% ஆக இருந்தது.
அதானி டிரான்ஸ்மிஷன்
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 3,15,957 கோடி ரூபாயாகும். இதில் 2.42%ல் இருந்து, செப்டம்பர் 2022ல் 3.46% ஆக அதிகரித்துள்ளது. இதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 0.13% ஆக இருந்தது. செப்டம்பர் 2022லும் 0.13% ஆக அதிகரித்துள்ளது.
அதானி போர்ட்ஸ்
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1,92,284 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனத்தில் செப்டம்பர் 2020ல் 9.61% ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 2022ல் 9.61% ஆக இருந்தது. இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் செப்டம்பர் 2020ல் 3.94% ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 2022ல் 4.73% ஆக இருந்தது.
அதானி பவர்
அதானி பவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது செப்டம்பர் 2020ல் 1% மேலாக இருந்த நிலையில், செப்டம்பர் 2022ல் 1% மேலாக இருந்தது. இதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பங்கு எதுவும் இல்லை.
அதானி வில்மர்
அதானி வில்மர் நிறுவனத்தில் 84,160 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு உள்ளது. இதில் கடந்த செப்டம்பர் 2020ல் பங்குகள் எதுவும் எல்ஐசி வசம் இல்லாத நிலையில், செப்டம்பர் 2022ல் 1% மேலாக இருந்தது. இதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலும் எந்த பங்கும் இல்லை.
மொத்தமாக அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 18,98,350 கோடி ரூபாயாகும். இந்த சந்தை மதிப்பானது டிசம்பர் 1, 2022 நிலவரப்படி கணக்கிடப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications