மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடானது இன்று வெற்றிகரமாக மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
மூன்றாவது நாளின் முடிவில் மொத்தம் 1.38 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளது. அதேசமயம் கிரே மார்கெட்டில் பிரீமியம் சரிவினைக் கண்டுள்ளது.
இது 16.02 கோடி ஈக்விட்டி பங்குகளுக்கு எதிரான, 22.34 கோடி பங்குகளுக்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளது.
3வது நாள் விண்ணப்பம்
3வது நாளிலும் பாலிசிதாரர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. பாலிசிதாரர்கள் 4.01 மடங்கு விண்ணப்பத்தினையும், ஊழியர்கள் 3.06 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்கள் ஓதுக்கீட்டில் 1.23 மடங்கும், இதே தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு 56%மும், இதே அன்னிய முதலீட்டாளர்கள் 75 சதவீதமும் விண்ணப்பத்தினை பெற்றுள்ளது.
ஞாயிற்று கிழமையும் விண்ணபிக்கலாம்
எல்ஐசி IPO தொடங்கியுள்ள நிலையில முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மே8ம் தேதி அதன் அனைத்து கிளைகளும் வழக்கம்போல இயங்கும் என அறிவித்துள்ளது. இதேபோல பிஎன்பி வங்கியும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதன் மூலம் ஞாயிற்று கிழமையும் கவலையில்லாமல் ஐபிஓவுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். (விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க மட்டுமே முடியும்)
கிரே மார்கெட்டில் சரிவு
ஒருபுறம் ஐபிஓ களை கட்டி வரும் நிலையில், மறுபுறம் கிரே மார்க்கெட்டில் பிரீமியம் 50% சரிவினைக் கண்டு, 42 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பு நிறுவனம் கிரே மார்கெட்டில் பிரீமியம் 85 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது.
கிரே மார்கெட் என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்காகப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பாகவே, வேறு வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுப் பங்கு விற்பனை நடைபெற்றால் அதனை இணையான பங்குச் சந்தை, ஆங்கிலத்தில் கிரே மார்க்கெட் (Grey Market) என்று கூறுவார்கள்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications