இந்தியாவின் பிரம்மாண்ட ஐபிஓ-ஆக கருதப்படும் எல்ஐசி-யின் பொதுப் பங்கு வெளியீடானது இரண்டாவது நாளை எட்டியுள்ளது.
2வது நாளில் இதுவரையில் 85% சந்தாவினை பெற்றுள்ளது. பாலிசிதாரர்கள் மற்றும் சில்லறை விற்பனை ஒதுக்கீடுகளுக்கு, ஏற்கனவே முறையே 2.78 மடங்கு மற்றும் 1.76 மடங்கு சந்தாவினை பெற்றுள்ளது.
ஊழியர்களின் ஒதுக்கீடு 2வது நாளில் 0.78 மடங்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
ஐபிஓ-வில் விண்ணப்பம்
அதேபோல் தகுதிவாய்ந்த நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் தங்களது ஒதுக்கீட்டில் 34% விண்ணபித்துள்ளனர்.
எல்ஐசி பொது பங்கு வெளியீட்டில் பங்கு விலை 902 - 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 60 ரூபாய் தள்ளுபடியும், ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் 45 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது
யாருக்கெல்லாம் சலுகை?
எல்ஐசியின் இந்த தள்ளுபடியானது பாலிசிதாரர்களுக்கு ஏப்ரல் 13, 2022 வரையில் பாலிசி எடுத்தவர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் இந்த பங்கு வெளியீட்டின் மூலம் கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் அரசாங்கம் தன் வசம் உள்ள 3.5 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மிகப்பெரிய ஐபிஓ
எல்ஐசி ஐபிஓ மதிப்பானது குறைந்திருந்தாலும், தற்போது வரையில், எல்ஐசி தான் மிகப்பெரிய பங்கு வெளியீடாக உள்ளது. எல்ஐசி-க்கு முன்னதாக பேடிஎம் தான் மிகப்பெரிய பங்கு வெளியீட்டினை செய்த நிறுவனமாக இருந்தது. இதன் மதிப்பு 18,300 கோடி ரூபாயாகும். இதில் கோல் இந்தியாவின் பங்கு வெளியீட்டு மதிப்பானாது, 15,500 கோடி ரூபாயாக உள்ளது. இதே ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் வெளியீட்டு மதிப்பானது 11,700 கோடி ரூபாயாகும்.
எல்ஐசி சொத்து நிர்வாகம்
தரவின் படி, 29 கோடி பாலிசி ஹோல்டர்கள், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், 13 லட்சம் ஏஜெண்ட்டுகளையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 150 நாடுகளின் ஜிடிபியை விட மேலாக, அதன் சொத்தினை(AUM) நிர்வகிக்கிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications