நாட்டின் முன்னணி பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு, சிறந்த முதலீட்டாளர் என்பதும் பலரும் அறிந்த ஒரு விஷயம் எனலாம்.
அந்த வகையில் எல்ஐசி நிறுவனம் மூன்றாம் காலாண்டில் வாங்கிய பங்குகள் என்னென்ன? இதில் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
சென்செக்ஸ் 5.9% அதிகரித்துள்ள நிலையில், எல்ஐசி கணிசமான பங்குகளை அதிகரித்த 10 நிறுவனங்கள் எது எது? வாருங்கள் பார்க்கலாம்.
ஐஆர்சிடிசி
முதலாவதாக நாம் பார்க்கவிருக்கும் பங்கு ஐஆர்சிடிசி. இந்த பங்கினில் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 7.42% ஆக பங்கினை அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.44% ஆக வைத்திருந்தது. ஐஆர்சிடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 51,984 கோடி ரூபாயாக உள்ள நிலையில், இதன் பங்கு விலையானது பிப்ரவரி 17 அன்று 649.80 ரூபாயாக இருந்தது.
வோல்டாஸ்
இன்சூரன்ஸ் நிறுவனம், இரண்டாவதாக அதிகளவில் வைத்திருக்கும் பங்கு வோல்டாஸ். இந்த நிறுவத்தில் 1.64%ல் அதிகரித்து, 9.88% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 8.24% ஆக இருந்தது. வோல்டாஸ் என்பது ஏசி உற்பத்தியாளராகும். இதன் சந்தை மதிப்பு 28,277 கோடி ரூபாயாகும். இதன் பங்கு விலை 854.6 ரூபாயாகும்.
எம்பஸிஸ்
ஐடி நிறுவனமான எம்பஸிஸ் 1.56% பங்கினை அதிகரித்து. 3.66% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 2.1% ஆக இருந்தது. இதன் சந்தை மதிப்பு 42,129 கோடி ரூபாயாகும். இதன் பங்கு விலை 2236.30 ரூபாயாகும்.
டெக் மஹிந்திரா
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் எல்ஐசியின் முதலீட்டு விகிதம் கடந்த டிசம்பர் காலாண்டில் 1.48% அளவுக்கு அதிகரித்து, 7.44% எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 5.96% ஆக இருந்தது.
கேப்ரி குளோபல் கேப்பிட்டல்
எல்ஐசி நிறுவனம் பங்கினை அதிகரித்த நிறுவனங்களில் கேப்ரி குளோபல் கேப்பிட்டலும் ஒன்று. இதில் 1.44% அதிகரித்து, தனது இருப்பினை 9.69% ஆக அதிகரித்துக் கொண்டுள்ளது. இதில் முந்தைய காலாண்டில் 8.25% ஆக இருந்தது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 14,495 கோடி ரூபாயாக உள்ளது. இதன் பங்கு விலை 703.5 ரூபாயாகவும் உள்ளது.
மற்ற என்னென்ன நிறுவனங்கள்?
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தில் 1.35% அதிகரித்து, 8.95% ஆக அதிகரித்துள்ளது. இதே வெல்ஸ்பன் நிறுவனத்தில் 1.29% அதிகரித்து, 8% ஆக அதிகரித்துள்ளது.
தீபக் நைட்ரேட் நிறுவனத்தில் 1.27% அதிகரித்து, 6.44% ஆக அதிகரித்துள்ளது. கெயில் நிறுவனத்தில் 1.02% அதிகரித்து, 7.01% எனும் அளவுக்கும், ஹெச்.டி.எஃப்.சி ஏஎம்சி-யில் 1% அதிகரித்து, 9.12% ஆகவும் பங்கினை அதிகரித்துள்ளது.
மற்ற பெரிய ஹோல்டிங்குகள்
இது தவிர ஐடிபிஐ வங்கியில் 49.24% பங்கும், எல் ஐசி ஹவுஸிங் பைனான்ஸில் 45.24% பங்கும், ஸ்டாண்டர்டு பேட்டரீஸ் 19.99%மும், மாடெல்லா வூலன்ஸ் 17.31%மும், கொச்சின் மலபார் எஸ்டேட்ஸ் & இண்டஸ்ட் ரீஸ் 16.77% பங்கினையும் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications