மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய போர்ட்போலியோ மதிப்பில் 1.45 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனால் முதலீட்டாளர்களின் போர்ட்போலியோ ரத்தக்களறியாக காட்சி தருகிறது. சில்லறை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இந்த கரடியின் பிடியில் சிக்கி பெருமளவில் பணத்தை இழந்துள்ளன.

இந்தியாவில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது எல்ஐசி எனப்படும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா. எல்ஐசி நிறுவனத்தை பொறுத்தவரை சரியான நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்வதில் ஜாம்பவன் என கூறலாம். ஆனால் இந்த பங்குச் சந்தை வீழ்ச்சி எல்ஐசி நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் எல்ஐசி நிறுவனத்தின் போர்ட்போலியோ மதிப்பில் 1.45 லட்சம் கோடி ரூபாய் சரிவடைந்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் ஈக்விட்டி போர்ட்போலியோ மதிப்பு கடந்த 2024 டிசம்பர் மாதம் 14 .9 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. எல்ஐசி நிறுவனம் மொத்தம் 310 நிறுவனங்களில் முதலீடு செய்து கணிசமான பங்குகளை வைத்திருந்தது. ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் எல்ஐசி நிறுவனத்தின் போர்ட்போலியோ மதிப்பு 13.4 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக பங்குச்சந்தை பெருமளவில் சரிவடைந்து வருவதே இதற்கு காரணம். எல்ஐசி நிறுவனம் கணிசமான பங்குகளை வைத்திருக்கக்கூடிய ஐடிசி, டிசிஎஸ், எஸ்பிஐ போன்ற பெரும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவடைந்து இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஐடிசி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கிறது எல்ஐசி நிறுவனம். ஐடிசி நிறுவன பங்கு சரிவடைந்ததால் 17,000 கோடி ரூபாயை இழந்துள்ளது.
அதேபோல ஐடி சேவையில் முன்னணியில் இருக்கக்கூடிய டிசிஎஸ் நிறுவனத்தில் எல்ஐசி 4.75 சதவீத பங்குகளையும் இன்போசிஸ் நிறுவனத்தில் 10.58 சதவீத பங்குகளையும் கொண்டு இருக்கிறது. இந்த பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக டிசிஎஸ்-இல் வைத்திருந்த பங்குகளில் 10,000 கோடி ரூபாயையும் இன்போசிஸ் நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளில் 7,640 கோடி ரூபாயையும் எல்ஐசி நிறுவனம் இழந்துள்ளது. ஏஸ் ஈக்விட்டி என்ற நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எல்ஐசி நிறுவனம் எஸ்பிஐ நிறுவனத்தில் 9.13 சதவீத பங்குகளையும் , ஐசிஐசிஐ வங்கியில் 7.14 சதவீத பங்குகளையும் கொண்டு இருக்கிறது. சந்தை வீழ்ச்சியால் இந்த இரண்டு நிறுவனங்களிலும் எல்ஐசி நிறுவனம் மொத்தமாக 11 கோடியை இழந்துள்ளது. அதேபோல எல்&டி, ஹெச்சிஎல் டெக், மகேந்திரா& மகேந்திரா, அதானி போர்ட் , அதானி எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களிலும் எல்ஐசி நிறுவனம் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறது. இவை அனைத்துமே சரிவில் இருப்பதால் எல்ஐசி நிறுவனத்தின் போர்ட்போலியோ வேகமாக சரிந்திருக்கிறது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளன. மீண்டும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்ய வரும்போதுதான் பங்குச்சந்தை வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பும் என சொல்லப்படுகிறது. அதுவரை பங்குச்சந்தை ரத்தக்காடாகவே காட்சியளிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது சில்லறை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல எல்ஐசி போன்ற பெரிய முதலீட்டாளரையும் விட்டு வைக்காது என கூறுகின்றனர்.
Story Written: Devika
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications