இந்தியாவின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி), முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸில் தனது பங்குகளை 5.002 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை எல்ஐசி பங்குச்சந்தையில் வெளியிட்ட ஒழுங்குமுறை அறிக்கையின்படி, ஓப்பன் மார்கெட்டில் இருந்து கூடுதலாக 0.166 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் ஹெச்சிஎல் நிறுவனத்தில் 5 சதவீதம் வரையிலான பங்கு இருப்பு உயர்ந்தது எனத் தெரிவித்தது.

இதன் விளைவாக, எல்ஐசி இப்போது ஹெச்சிஎல் டெக்னாலஜிஸில் 13,57,57,092 பங்குகளை வைத்துள்ளது. 2025 ஆம் நிதியாண்டில் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி திறனைப் பயன்படுத்தி, எல்ஐசி தனது பங்குச்சந்தை முதலீட்டு லாபத்தை உயர்த்தவே இந்நிறுவனத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் சிறப்பான நிதி செயல்திறன் இந்த புதிய முதலீட்டை ஈர்க்க முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
கவனிக்க வேண்டியவை:
- எல்ஐசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸில் தனது பங்குகளை 0.166 சதவீதம் கூடுதலாக வாங்கி 5.002 சதவீதமாக உயர்த்தியது.
- ஹெச்சிஎல் டெக்னாலஜிஸில் எல்ஐசி தற்போது 13,57,57,092 பங்குகளை வைத்துள்ளது.
- மார்ச் 2025 இல் 4.83 சதவீதமாக இருந்த பங்குகளை 4.996 சதவீதமாக உயர்த்திய பின், ஏப்ரல் 28 அன்று 0.006 சதவீதம் கூடுதல் பங்குகள் வாங்கப்பட்டன.
- பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு 2024 நான்காம் காலாண்டில் 1.77 சதவீதத்தில் இருந்து 2025 நான்காம் காலாண்டில் 7.66 சதவீதமாக உயர்ந்தது.
- ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், 2025 நான்காம் காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 8 சதவீத லாப உயர்வு (ரூ.4,307 கோடி) மற்றும் 6 சதவீத வருவாய் உயர்வு (ரூ.30,246 கோடி) பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸில் 5 சதவீத பங்கு உரிமையைத் தாண்டுவதற்கு எல்ஐசி படிப்படியாகச் சிறிய அளவில் பங்குகளை வாங்கியுள்ளது மூலம் சாத்தியமானது. 2025 ஆம் நிதியாண்டில் எல்ஐசி உயர் வளர்ச்சி கொண்ட துறைகளில் தனது முதலீட்டை பல்வகைப்படுத்தி லாப வளர்ச்சி வாய்ப்புகளை வலுப்படுத்தி வருவதற்கான உத்தியைக் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸில் பங்குகளை அதிகரித்ததுடன், மற்ற முக்கிய நிறுவனங்களிலும் குறிப்பிடத்தக்கப் பங்குகளை வாங்கி எல்ஐசி தனது இருப்பை உயர்த்தியுள்ளது. குறிப்பாக, மார்ச் 2025 இன் பங்கு உரிமை தரவுகள் படி, எல்ஐசி பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தில் தனது பங்கை 2024 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 1.77 சதவீதத்தில் இருந்து 2025 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 7.66 சதவீதமாக உயர்த்தியுள்ளது என தெரிய வந்துள்ளது.
எல்ஐசி வலுவான சந்தை செயல்திறனையும் நீண்டகால திறனையும் காட்டும் நிறுவனங்களில் முதலீட்டு செய்து தனது லாப அளவை உயர்த்தவும், லாப விகிதத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் முதலீட்டை அதிகரித்து வருகிறது.
எல்ஐசி நிறுவனம் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முதலீட்டை அதிகரிக்க முக்கியமான காரணமாக, 2025 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்கான சிறப்பான நிதி முடிவுகள் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
ஏப்ரல் 22 அன்று, ஹெச்சிஎல் நிறுவனம் ஜனவரி-மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலகட்டத்திற்கு ஹெச்சிஎல் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் வருடாந்திர அடிப்படையில் 8 சதவீத உயர்ந்து ரூ.4,307 கோடியாகவும், இயக்க வருவாயில் 6 சதவீத உயர்ந்து ரூ.30,246 கோடியாகவும் இருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப சேவைகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் சேவைகளில் இந்நிறுவனத்தின் சிறப்பான சேவை புதிய வாடிக்கையாளர்களையும், அதிகப்படியான வருவாயை ஈட்ட முக்கிய காரணமாக இருந்துள்ளது.
எல்ஐசியைப் பொறுத்தவரை, இந்த முதலீடு அதன் முதலீட்டு தளத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பாலிசிதாரர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குவதற்கும் இந்தியாவின் கார்ப்பரேட் துறையின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் செய்யப்பட்டவை.
எல்ஐசி போன்ற முக்கிய முதலீட்டாளரின் முதலீடு ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பதஞ்சலி புட்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய புதிய நம்பிக்கையைத் தரும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications