2 நாட்களில் ரூ.31,000 கோடி வருமானம் பார்த்த மத்திய அரசு.. எல்லா புகழும் LICக்கே..!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் இருந்து தனக்கு இருந்த பங்குகளை விற்பனை செய்து இரண்டு நாட்களிலேயே மத்திய அரசு 31,000 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த எல்ஐசி நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிட்டு பொது நிறுவனமாக மாறியது. இந்நிலையில் எல் ஐசி தன் வசம் இருந்த கூடுதலான பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் (OFS) முறையில் மத்திய அரசு மீண்டும் விற்பனை செய்துள்ளது. எல்ஐசி பங்குகளை வாங்க நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவியது.

2 நாட்களில் ரூ.31,000 கோடி வருமானம் பார்த்த மத்திய அரசு.. எல்லா புகழும் LICக்கே..!!

ஆகஸ்ட் 4ஆம் தேதி நிறுவன முதலீட்டாளர்களும், ஆகஸ்ட் 5ஆம் தேதி சில்லறை முதலீட்டாளர்களும் எல்ஐசி பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்தனர். இதன் மூலம் அரசாங்கம் மொத்தம் 31,552 கோடியை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. முதலீட்டாளர்களிடமிருந்து வந்த அபரிமிதமான வரவேற்பை கருத்தில் கொண்டு, அரசு Greenshoe option-ஐ பயன்படுத்தி கூடுதல் பங்குகளை விற்பனை செய்தது. இதன் மூலம் மொத்தம் 82,23,33,558 பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக ஒரு நிறுவனம் பொது நிறுவனமாக மாறி பங்குச்சந்ய்தையில் பட்டியலிடப்பட்டால் அதில் பொதுமக்களின் பங்கு விகிதம் 10 சதவீதமாக உயர வேண்டும் என்பது செபியின் விதிமுறை. அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு 2022 ஐபிஓ வெளியீட்டிற்கு பின் இப்படி பங்குகளை விற்பனை செய்துள்ளது.

Also Read

செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற விண்ணப்ப பதிவில் நிறுவன முதலீட்டாளர்கள் அடிப்படை பங்கு அளவை காட்டிலும் 3.32 மடங்கு அதிகமாக விண்ணப்பம் செய்தனர். புதன்கிழமை சில்லறை முதலீட்டாளர்களும் 1.82 மடங்கு அதிகமாக விண்ணப்பம் செய்தனர்.

ஒரு பங்கின் விலை 382 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. யாருக்கெல்லாம் பங்கு ஒதுக்கப்பட்டதோ அது அவர்களின் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. எல்.ஐ.சி பங்கு விற்பனை மூலம், நடப்பு நிதியாண்டில் அரசுக்கு பங்கு விற்பனை மற்றும் முதலீட்டை திரும்ப பெற்றதன் மூலம் கிடைத்த மொத்த வருவாய் 52,000 கோடியை கடந்துள்ளது. 2019-20 நிதியாண்டிற்கு பிறகு இதுவே மிக அதிகபட்ச தொகையாகும்.

Recommended For You

எல்ஐசி நிறுவனம் இந்தியாவில் அதிக லாபம் பார்க்கும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 55,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதே வேளையில் 1.11% வரை ஈவுத்தொகையும் முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இன்று எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 389 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+