எல்ஐசி நிறுவனம் வாங்கி வைத்திருக்கும் ஒரு பென்னி ஸ்டாக் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் ஒரே நாளில் 5% வரை உயர்ந்தது. Integra Essentia என்ற இந்த பென்னி ஸ்டாக் தொடர்ந்து 5 நாட்களாக அப்பர் சர்க்யூட் நிலையிலேயே இருந்தது. வேளாண் பொருட்கள் ,துணிமணிகள் மற்றும் உள்கட்டமைப்பு துறை , எரிசக்தி என பல்வேறு துறைகளில் தொழில் செய்து வரக்கூடிய நிறுவனம்தான் Integra Essentia .
எல்ஐசி நிறுவனம் இதில் கணிசமான பங்குகளை வாங்கி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தையில் 4.81% உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 460 கோடி ரூபாய் ஆகும். கடந்த 5 நாட்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 27% உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தனது 52 வார கால உச்சமான 7.69 ரூபாயை எட்டியது. இதனை அடுத்து சரிவடைந்து தற்போது 4. 31 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனத்தில் எல்ஐசி 1.06 % பங்குகளை வைத்துள்ளது.
அதாவது 97,19, 832 பங்குகள் எல்ஐசிக்கு சொந்தமாக இருக்கின்றன. இந்த நிறுவனம் அண்மையில் வேளாண் பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்பு துறைகள் சம்பந்தமான பல்வேறு ஆர்டர்களை பெற்றுள்ளது. இதன் காரணமாக பங்கு மதிப்பானது கணிசமாக அதிகரித்து வருகிறது.
21 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ஆர்டர்களை பெற்றிருப்பதாக கூறும் இந்நிறுவனம் , இதன் மூலம் தங்களது வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என உறுதி தெரிவித்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் Integra Essentia நிறுவனத்தின் பங்கு 34 %, 6 மாதத்தில் 52 % உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இன்டெக்ஸை ((RSI) பொருத்தவரை 69 என்ற அளவில் இருக்கிறது. அதாவது அதிகமாக யாரும் இதை வாங்கவும் இல்லை அதிகமாக யாரும் இதை விற்கவும் இல்லை என்ற பிரிவுக்குள் இருக்கிறது.
இந்த நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ1, புக் வேல்யூ 1.56. இந்த நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டு 246 கோடி ரூபாய் ஆகும். இதில் லாபம் 7 கோடி ரூபாய். நிறுவனத்தின் நிகர மதிப்பு 75 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இந்த நிறுவன பங்குகளில் 77.98% சில்லறை முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது ப்ரமோட்டர்கள் 20. 81% பங்குகளை வைத்திருக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications