LIC: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, மிகப்பெரிய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளராகும். இந்த நிறுவனம் தொடர்ந்து இந்திய நிறுவனங்கள் பலவற்றில் முதலீட்டினை செய்து வருகின்றது.
கடந்த மார்ச் காலாண்டில் எல்ஐசி 3.57 லட்சம் பங்குகளை தனது போர்ட்போலியோவில் சேர்த்துள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக இந்த நிறுவனத்தில் முதலீடுகளை அதிகரித்துள்ளது.
மொத்தத்தில் கடந்த மார்ச் 31 நிலவரப்படி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 4.26% பங்குகள் உள்ளது. இது டிசம்பர் 31, 2022 நிலவரப்படி 4.23% பங்குகளை வைத்திருந்தது.

கடந்த மார்ச் மாதம் அதானி குழுமத்தில் கடுமையான செல்லிங் அழுத்தம் இருந்து வந்த நிலையில், அதானி குழும பங்குகள் பலவும் கடும் வீழ்ச்சியினை கண்டன. இதற்கிடையில் அதானி குழும பங்குகளில் எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டின் நிலை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் எல்ஐசி அதானி குழும பங்குகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனம், அதானி குழும நிறுவனங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. குறிப்பாக மோசடியான பரிவர்த்தனை, ஷெல் நிறுவனங்கள் மூலம் பணபரிவர்த்தனை, போலியான வெளி நாட்டு நிறுவனங்கள் என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது̣.
மேலும் அதானி குழுமம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியது. ஆனால் ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமம், செலுத்த வேண்டிய கடன்களை முன் கூட்டியே செலுத்தியது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு ஆதாரவாக அமைந்தது.
அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அதானி குழுமத்தில் புதிய பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது அதானி குழுமத்தின் மீதான வளர்ச்சிக்கு உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சரிவினைக் கண்ட நிலையில், இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் இந்த வாய்ப்பினை எல்ஐசி சரியான வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
மார்ச் காலாண்டில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது சராசரி விலையாக 37% சரிவினைக் கண்டு, 2345.08 ரூபாயாகவும் உள்ளது. இதே டிசம்பர் காலாண்டில் சராசரி விலையாக 3,723.11 ரூபாயாக உள்ளது.
தரவானது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஜூன் 2021ல் எல்ஐசி வசம் 1.32% பங்கு இருந்தது. இந்த ஜூன் 2021 காலாண்டில் இருந்தே தொடர்ந்து எல்ஐசி தனது முதலீட்டினை அதிகரித்து வருகின்றது.

அதானி குழும பிரச்சனைகள் குறித்து எல்ஐசி-யின் தலைவர் எம் ஆர் குமார், அதானி குழும அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியிருந்ததும் நினைவுகூறத்தக்கது.
மார்ச் 2023 காலாண்டில் 1.36% பங்கினையும், டிசம்பர் 31,2022 காலாண்டில் 1.28% பங்கினையும் வைத்துள்ளது. இது தவிர அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கிலும் பங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications