அதானி குழும பங்குகள் தொடர்ந்து தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்ஐசி உள்ளிட்ட பங்குகளும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளன.
அதானி குழுமத்தில் செய்துள்ள எல்ஐசி நிறுவனத்தின் முதலீட்டு மதிப்பு கிட்டதட்ட 27,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது பிப்ரவரி 23 முடிவு நிலவரப்படி கணக்கிடப்பட்டது.
இன்றைய நிலவரம்?
கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது 590.95 ரூபாயாக முடிவுற்று இருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 590.90 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 593.95 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 584.10 ரூபாயாகும். இன்றைய வர்த்தக முடிவில் இப்பங்கின் விலையானது 1.07% சரிவினைக் கண்டு, 854.65 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
52 வார உச்சம் & சரிவு?
இப்பங்கின் 52 வார உச்ச விலை என்பது 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 582.45 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 584.10 ரூபாய் என்பது சற்றே ஆறுதல் தரக்கூடிய ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 369,790 கோடி ரூபாய் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
எவ்வளவு லாபம்?
இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 2.92% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த 1 மாதத்தில் 16.74% சரிவினக் கண்டுள்ளது. இதே கடந்த 3 மாதத்தில் 6.37% எனும் அளவுக்கும், நடப்பு ஆண்டில் இதுவரையில் 16.60% எனும் அளவுக்கும் சரிவினைக் கண்டுள்ளது.
டெக்னிக்கலாகவும் பண்டமெண்டலாகவும்?
டெக்னிக்கலாக பார்க்கும்போது எல்ஐசி பங்கு விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாக, தினசரி கேண்டிலில் காணப்படுகின்றது.
இதே பண்டமெண்டலாகவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டின் மத்தியில் அதானி குழும பங்குகள் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன. இது இன்னும் சிறிது காலத்துக்கு நீடிக்கலாம் என்ற நிலையே இருந்தே வருகின்றது. ஆக இது அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசி-யிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
நஷ்டம் காணத் தொடங்கியுள்ள எல்ஐசி
இதுவரையில் லாபத்தில் இருந்த எல்ஐசி, தற்போது நஷ்டத்தினை காணத் தொடங்கியுள்ளது. எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இது அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
இழப்பு ஆரம்பம்
எல்ஐசி அதானி குழும பங்குகளில் 30,127 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளதாக முன்னதாக அறிவித்தது. இதன் மதிப்பு 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கீழாக சரிவினைக் கண்டுள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடிகள், போலி நிறுவனங்கள் மூலம் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஜனவரி 24ம் தேதி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கைக்குப் பின் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டன.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications