எல்ஐசி பங்கினை வாங்கி போடலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க!

LIC: எல்ஐசி பங்கு விலையானது கடந்த பிப்ரவரி 27, 2023 அன்று அதன் லைஃப் டைம் லோவான 566 ரூபாய் என்ற லெவலை எட்டியது. எனினும் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்று என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது, 607.30 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது.

எனினும் தற்போது (12.50 மணியளவில்) சற்று அதிகரித்து, 602.15 ரூபாயாக காணப்படுகின்றது.

இன்று இதன் உச்சம் இது வரையில் 607.30 ரூபாயாக தொட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச விலை இதுவரையில் 597 ரூபாயாக உள்ளது. இதே இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 566 ரூபாயாகும்.

 விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

கடந்த மூன்று அமர்வுகளில் மட்டும் எல்ஐசி 7% லாபத்தில் காணப்படுகின்றது. இது எல்ஐசி யூலிப் அல்லாத 6 புதிய திட்டங்களை கடந்த 9 மாதங்களில் அறிமுகம் செய்துள்ளது.

ஆக நீண்டகால நோக்கில் எல்ஐசி பங்கு விலையானது அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. இதன் இலக்கு விலையாக 770 ரூபாயினை தொடலாம் என கணித்துள்ளது. இப்பங்கின் முக்கிய சப்போர்ட் விலை 584 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.

நீண்டகால நோக்கில் எப்படி?

நீண்டகால நோக்கில் எப்படி?

பண்டமெண்டல் ரீதியாக எல்ஐசி பங்கு விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனமும் கணித்துள்ளது.

இதே ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் நீண்டகால நோக்கில் எல்ஐசி பங்கு விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டெக்னிக்கலாகவும் ஏற்றம் காணலாம் . இதன் உடனடி சப்போர்ட் விலையானது 584 ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது.

இலக்கு விலை?

இலக்கு விலை?


ஏற்கனவே இப்பங்கினை வாங்கி வைத்திருப்பவர்கள் அப்படியே வைத்திருக்கலாம். இதற்கு ஸ்டாப் லாஸ் 584 ரூபாயாக வைத்துக் கொள்ள வேண்டும். புதிய முதலீட்டாளர்களும் இந்த லெவலில் வாங்கி வைக்கலாம். இதற்கும் ஸ்டாப் லாஸ் 584 ரூபாயாக நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஆக மீடியம் டெர்மில் இப்பங்கின் விலையானது 640 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

நீண்டகால நோக்கில் எப்படி?

நீண்டகால நோக்கில் எப்படி?

எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் இப்பங்கின் இலக்கு விலை 770 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கிறது. இது தற்போதைய 605 ரூபாய் என்ற லெவலில் இருந்து 25% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

இதுவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

இதற்கிடையில் எஸ்பிஐ. எல்ஐசி உள்ளிட்ட பல நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளன. இதுவும் எல்ஐசி பங்கினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது.

அதானி பங்குகளில் தாக்கம்

அதானி பங்குகளில் தாக்கம்

இந்த நிலையில் அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அப்போது அதானி - ஹிண்டர்ன்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, ஆக இதுவும் அதானி குழும நிறுவனத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+