எல்ஐசி பங்கு விலை 22% வரை அதிகரிக்கலாம்.. எப்போது.. இது சரியான வாய்ப்பு தானா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் ஜாம்பவானான எல்ஐசி சமீபத்தில் தான் பங்கு சந்தையில் நுழைந்தது. ஆரம்பத்தில் இப்பங்கின் விலையானது சற்று தடுமாற்றம் கண்டாலும், தற்போது பெரியளவில் சரிவினைக் காணாமல் சற்று வலுவாக காணப்படுகின்றது.

 

இன்று காலை இப்பங்கு விலையானது 3% மேலாக ஏற்றம் கண்டிருந்த நிலையில், முடிவில் 2% மேலாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.

இந்த பங்கின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 682 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. இந்த லெவலில் இருந்து 22% அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் இலக்கு விலையினை 830 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர்.

ஐஆர்சிடிசி பங்கினை வாங்க பரிந்துரை செய்த நிபுணர்கள்.. உங்ககிட்ட இருக்கா? ஐஆர்சிடிசி பங்கினை வாங்க பரிந்துரை செய்த நிபுணர்கள்.. உங்ககிட்ட இருக்கா?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்று என் எஸ் இ-யில் 2.23% அதிகரித்து, 697.65 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 706.60 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 691.30 ரூபாயாகும். இதன் 52 வார உச்சம் 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 650 ரூபாயாகும்.

இதே பிஎஸ்இ-யில் 2.30% அதிகரித்து, 697.85 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 706.50 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 691.95 ரூபாயாகும். இதன் 52 வார உச்சம் 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 650 ரூபாயாகும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்த மதிப்பீடானது எல்ஐசியின் லாப விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் வந்துள்ளது. எல்ஐசி-ன் சந்தை மதிப்பு 4.4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் 52 வார உச்சமானது டிசம்பர் 10, 2021 அன்று எட்டியது. இதன் 52 வார சரிவு விலையினை ஜூலை 1, 2022 அன்று எட்டியது குறிப்பிடத்தக்கது.

காலாண்டு முடிவு
 

காலாண்டு முடிவு

எல்ஐசி நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 682.88 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. இதே இதன் பிரிமீய வருமானம் 20.35% அதிகரித்து, 98,351.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே மற்ற வருவாய் விகிதமானது 160.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 145.47 கோடி ரூபாயாக இருந்தது. இதே பங்குதாரர்களுக்கு 799.24 கோடி ரூபாய் தொகையானது பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நல்ல வளர்ச்சி காணலாம்

நல்ல வளர்ச்சி காணலாம்

கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், நாங்கள் நல்ல செயல்பாட்டினை எதிர்பார்க்கின்றோம். எங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரில் தொடர்பில் ஈடுபடும் மாதிரிக்கு கொண்டு வருகின்றோம். நாங்கள் முதல் காலாண்டிலேயே வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளோம். ஆக இனியும் வலுவாக காணலாம். இது பங்கு விலையை ஊக்குவிக்கலாம். இது பங்கு விலைக்கு ஆதரவாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC shares may rise 22% post june quarter results: Check new target price

LIC shares may rise 22% post june quarter results: Check new target price/எல்ஐசி பங்கு விலை 22% வரை அதிகரிக்கலாம்.. எப்போது.. இது சரியான வாய்ப்பு தானா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X