இந்தியாவின் பிரபல பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் பங்கு விலையானது, என்எஸ்இ-யில் புதிய குறைந்தபட்ச விலையாக 605.10 ரூபாயினை எட்டியுள்ளது.
அதானி குழும பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில், இதன் நிலைப்பாடு என்ன? சாமானிய மக்களின் பணத்தின் நிலை என்ன? இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில் தான் எல்ஐசி பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இன்று காலை தொடக்கத்திலேயே குறைந்த விலையில் தொடங்கிய நிலையில், புதிய குறைந்தபட்ச விலையையும் எட்டியுள்ளது.
ஐபிஓ-வில் இருந்து 50% சரிவு?
இது அதன் பொதுப் பங்கு வெளியீட்டு விலையில் இருந்து 50% கீழாக காணப்படுகின்றது. இது ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த பங்கினில் தொடரும் சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா? இங்கிருந்து என்ன செய்யலாம்? இது நிபுணர்கள் என்ன கணித்துள்ளனர் வாருங்கள் பார்க்கலாம்.
யெஸ் செக்யூரிட்டீஸ் கணிப்பு
இது குறித்து யெஸ் செக்யூரிடீஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கலாம். இது தற்போதைய விலையில் இருந்து 770 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. இது இன்று 605 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
என்ன காரணம்?
எல்ஐசி பங்கு விலையானது அதிகரிக்கலாம் என்று கூறியுள்ள தரகு நிறுவனம், யூலிப் பிரிவில் நிறுவனம் தொடர்ந்து நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இது மார்ஜின் வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர மற்ற வருடாந்திர திட்டங்கள், யூலிப் அல்லாத திட்டங்களிலும் வளர்ச்சி என்பது அதிகரித்து வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தும் வருகின்றது. இது மேற்கொண்டு நீண்டகால வளர்ச்சிக்கு துணை புரியலாம்.
பங்குகளை வாங்கி வைக்கலாமா?
மேற்கொண்டு பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கினை நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதன் இலக்கு விலையை 770 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.
இதன் முதலீட்டு துறை, இன்சூரன்ஸ் என பல பிரிவுகளிலும் நல்ல வருவாயினை ஈட்டலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதானி குழுமத்தால் பிரச்சனையில்லை
எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனங்களில் 36,000 கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்துள்ளது. இது அதானி குழுமத்தின் பல பங்குகளில் பல ஆண்டுகளாக முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீட்டின் மதிப்பானது ஜனவரி 27 அன்று 56,142 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. ஆக அதானி குழுமத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து பெரிய அச்சம் ஏதும் வேண்டாம் என அறிவித்துள்ளது.
நிபுணர்களின் கணிப்பு?
இது குறித்து தொடர்ந்து நிறுவனம் கண்காணித்து வருவதாகவும், இது குறித்து அதானியுடன் விரைவில் அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் கூறியது. இந்த நிலையில் நிபுணர்கள் அதானி குழும பங்குகளை நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்கின்றனர்.
இன்றைய பங்கு நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.15% குறைந்து, 606.70 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 623..65 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 605.35 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 2.16% குறைந்து, 606.70 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 622.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 605.10 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 582.45 ரூபாயாகவும் உள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications