இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) நிறுவனத்தில், அரசு வைத்துள்ள பங்குகளை படிப்படியாக விற்பனை செய்யப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் பல பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் வேளையில், இதில் பலவற்றில் செபியின் வரம்புக்கு அதிகமான பங்குகளை அரசு வைத்துள்ளது.
2025-26 நிதியாண்டில் எல்ஐசி நிறுவனத்தில் உள்ள அரசு பங்குகளில் 2 முதல் 3 சதவீதம் வரை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விற்பனை, 2027ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச பொது பங்குதாரர் அளவான 10 சதவீதத்தை அடையும் அரசின் இலக்கின் ஒரு பகுதியாக செய்யப்படும் பங்கு விற்பனையாகும். செபியின் அறிவுறுத்தலின் பெயரிலேயே இந்த விற்பனை நடக்கிறது.

எல்ஐசி பங்குகளின் விலை கடந்த ஒரு வருடத்தில் கணிசமாக குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் இன்று காலை வர்த்தகத்திலும் சரிவுடன் துவங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் சுமார் 0.89 சதவீதம் குறைந்து 747.50 ரூபாயாக உள்ளது.
எல்ஐசி பங்குகள் கடந்த 12 மாதங்களில் 23.29 சதவீதம் குறைந்துள்ளன, மேலும் இந்த ஆண்டில் மட்டும் 15.61 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில், பங்கு விலை 26.66 சதவீதம் குறைந்துள்ளது, கடந்த மூன்று மாதத்தில் 18.60 சதவீதம் குறைந்துள்ளது.இதன் மூலம் எல்ஐசி குறுகிய மற்றும் நீண்ட காலங்களில் அடிப்படையில் சரிவிலேயே உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு பங்குகளை விற்பனை செய்தால் திட்டமிட்ட தொகையைப் பெற முடியாது.
தற்போது வெளியாகியுள்ள மத்திய அரசு இந்த 2-3 சதவீத பங்குகளை மொத்தமாக ஒரே நேரத்தில் விற்பனை செய்யாமல் சிறிய அளவில் பல கட்டங்களாக விற்பனை செய்யப்படத் திட்டமிட்டு வருகிறது, ஆனால் அது எப்போது நடக்கும் என்பதை இனி தான் அறிவிக்கும். இந்த பங்கு விற்பனை பங்குச்சந்தை சூழ்நிலை சாதகமாக இருந்தால் மட்டுமே இது செயல்படுத்தப்படும்.
நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்), இந்த பங்கு விற்பனைக்கான வங்கிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிக்கும் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது.
எல்ஐசி நிறுவனம், குறைந்தபட்ச பொது பங்குதாரர் விதிமுறைகளை பூர்த்தி செய்ய செபி அமைப்பிடம் இருந்து மூன்று ஆண்டு கால அவகாசத்தை பெற்றுள்ளது. இந்த நீட்டிப்பு, எல்ஐசி நிறுவனம் 10 சதவீத பொது பங்குதாரர் இலக்கை மே 16, 2027க்குள் அடைய வேண்டும்.
எல்ஐசி நிறுவனம் மக்களுக்கு ஆயுள் காப்பீட்டை விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் மக்களிடம் பெறும் பாலிசி தொகையை வைத்து பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பாலிசியில் முதலீடு செய்தோருக்கு காப்பீட் தொகையை வழங்குகிறது. இப்படி எல்ஐசி முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications