2018-2019 நிதி ஆண்டிற்கான கர்நாடகா பட்ஜெட்டினை தாக்கல் செய்த முதலமைச்சர் சித்தராமையா மதுபானங்கள் மீதான கலால் வரியை 8 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
சித்தராமையாவின் இந்த அறிவிப்பினால் மதுபான நிறுவனங்களின் பங்குள் இன்று சரிந்து காணப்படுகிறது.
யுனைடெட் ப்ரூவரிஸ்
யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனப் பங்குகள் வரி உயர்வு அறிவிப்பினை அடுத்து 3.08 சதவீதம் என 32.15 புள்ளிகள் சரிந்து 1,010 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ்
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகள் 2.05 சதவீதம் என 68.05 புள்ளிகள் சரிந்து 3,244.35 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ரவிகுமார் டிஸ்ட்லரிஸ்
ரவிகுமார் டிஸ்ட்லரிஸ் நிறுவன பங்குகள் 4.96 சதவீதம் என 0.95 புள்ளிகள் சரிந்து 18.20 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ரேடிகோ கெய்தான்
ரேடிகோ கெய்தான் நிறுவனப் பங்குகள் 3.86 சதவீதம் என 13.80 புள்ளிகள் சரிந்து 344.10 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பயனீர் டிஸ்டில்லரிஸ்
பயனீர் டிஸ்டில்லரிஸ் நிறுவனப் பங்குகள் 5.24 சதவீதம் என 10 புள்ளிகள் சரிந்து 181 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
எம்பீ டிஸ்டில்லரிஸ்
எம்பீ டிஸ்டில்லரிஸ் நிறுவனப் பங்குகள் 2.52 சதவீதம் என 1.15 புள்ளிகள் சரிந்து 44.50 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications