சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மணி அடித்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி
வளர்ச்சி பணிகளுக்காக உலக வங்கி உள்பட பல சர்வதேச வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கு அதிக சதவீத வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளது. இது பெரும் சுமையாக உள்ளது. இதற்கு மாற்றாக, தேசிய பங்குச் சந்தையில் நிதிப்பத்திரங்களை பட்டியலிட்டு நிதியை திரட்ட முடியும். தற்போது இந்த வழியை பின்பற்றி, சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்பிலான நிதிப்பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான நிதிபத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடக்கூடிய நிகழ்வு நடைபெற்றது. தமிழக முதல்வர் முக ஸ்டான்லின், சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மணி அடித்து தொடங்கி வைத்தார்.
நினைவு பரிசு
அந்த விழாவில், பத்திரங்கள் பட்டியலிடுவதில் முக்கிய பங்காற்றிய ஏகே கேபிட்டல் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குனர் வருண் கவுசிக், டிப்சன்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் அண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜிதேந்திரா ஷா, டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இணை இயக்குனர் அனதியாசென், கேவி கின்னி சட்ட நிறுவனத்தின் அஸ்தா தல்வார், இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் இணை இயக்குனர் திவ்யா ஸ்ரீவத்சவா, அகியூட் ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவர் ஸ்ரீதர் மற்றும் பிகான் டிரஸ்டீ ஷிப் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஜெய்தேவ் பட்டாச்சார்யா உள்ளிடோருக்கு முதல்வர் முக ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
கொசஸ்தலை
கொசஸ்தலை ஆறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுன் 769 கிமீ தூரத்திற்கு ரூ.3.000 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பணிகள் மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து 70 சதவீதத்துக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்ட திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரங்களுக்காக தற்போது ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தையில் நிதி பத்திரங்கள் பட்டியலிடப்பட்டு திரட்டப்படும் நிதியை , வட சென்னையில் கொசஸ்தலை ஆறு வடிநீர், வடிநில பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications