உள்நாட்டுப் பங்குச் சந்தையில் பல பென்னிப் பங்குகள் நீண்ட காலத்திற்கு அபரிமிதமான வருமானத்தைத் தரும் உதாரணங்கள் ஏராளம். அந்தவகயில் இந்த பதிவில் முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறப்பான வருமானத்தை வழங்கிய பென்னி பங்கு பற்றி நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம். இந்த பங்கின் பெயர் Lorenzini Apparels ஆகும். இந்த பங்கு ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது.
லோரென்சினி அப்பேரல்ஸ் பென்னி பங்கு பங்குச்சந்தையில் அதன் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. நிறுவனம் கடந்த ஐந்தாண்டுகளில் 6,500% வளர்ச்சி கண்டுள்ளது. 2019 நவம்பரில் வெறும் 0.39 சதவீதமாக இருந்த இந்த பங்கு 6,518 சதவீதம் உயர்ந்து தற்போது ரூ.25.81க்கு வர்த்தகமாகிறது.

லோரென்சினி அப்பேரல்ஸ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் முதலீடு செய்தவர்களுக்கு அபரிமிதமான வருமானத்தை அளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், நவம்பர் 2021 இல் ரூ 0.47 லிருந்து 5,391% உயர்ந்துள்ளது.
குறுகிய காலத்திலும் இந்த மல்டிபேக்கர் பங்கு உறுதியான வருமானத்தை அளித்துள்ளது. லோரென்சினி அப்பேரல்ஸ் கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 38 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது 2024 இல் கிட்டத்தட்ட 66 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 11 மாதங்களில் இருந்து பங்கு அதிக நேர்மறையான வருமானத்தை அளித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு நேற்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அப்பர் சர்க்யூட்டை எட்டியது. இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கு செப்டம்பர் 2024 இல் ஒரு பங்குக்கு ரூ.35.90 என்ற சாதனையை எட்டியது. செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.12.2 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1.86 கோடியாக இருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த வருவாய் 51 சதவீதம் அதிகரித்து ரூ.28 கோடியாக உயர்ந்துள்ளது.
1 லட்சம் முதலீடு செய்தால் 66 லட்சம் வருமானம் கிடைக்கும்: 2019 நவம்பரில் ஒரு முதலீட்டாளர் இந்தப் பங்கில் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், முதலீட்டாளர் நவம்பர் 2024-ல் ரூ.66 லட்சத்தை திரும்பப் பெற்றிருப்பார். அதேபோல், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 2021-ல் ரூ.0.47 ஆக இருந்த இந்தப் பங்கில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், ரூ.55 லட்சம் வருமானம் கிடைத்திருக்கும்.
இதற்கிடையில், இன்றைய வர்த்தகத்தில் லோரன்சினி அப்பரேல்ஸ் பங்கு 0.37% சரிவுடன் ரூ.24.00 ஆக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications