சமீபத்திய நாட்களாகவே பங்கு சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் என்பது நிலவி வருகின்றது. இதற்கிடையில் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் உள்நாட்டு தரகு நிறுவனமான பிரபுதாஸ் லில்லாதெர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் டெக்னிக்கல் ஆய்வாளரும், துணை தலைவர் வைஷாலி பரேக், மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என மூன்று பங்குகளை பட்டியலிட்டுள்ளார். அது என்னென்ன பங்குகள்? இலக்கு விலை என்ன? இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
லூபின் பங்கு
வைஷாலியின் பரிந்துரையில் மருந்து நிறுவனமான லூபின் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் இலக்கு விலையானது 730 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 650 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 798.90 ரூபாயாக உள்ளது. இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 583.05 ரூபாயாக உள்ளது.
எவ்வளவு ஏற்றம்?
இதன் சந்தை விலையானது 654.50 ரூபாயாகவும் காணப்படுகின்றது. இது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இப்பங்கின் விலையானது கடந்த 1 வருடத்தில் 13.36% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 6.64% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
மாருதி சுசூகி இந்தியா
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்கின் இலக்கு விலையானது, 9750 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 8400 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 52 வார உச்ச விலை 9768.65 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 7009.60 ரூபாயாக உள்ளது. இதன் சந்தை விலை 8467.55 ரூபாயாக உள்ளது. இது கடந்த அமர்வில் 0.59% சரிவினைக் கண்டுள்ளது. இப்பங்கின் விலை கடந்த 1 ஆண்டில் 14.16% அளவுக்கு ஏற்றம் கண்டும், இதே 3 ஆண்டுகளில் 54.3% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல்
ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என கூறுகின்றனர். இதன் இலக்கு விலை 755 ரூபாயாகவும், இதன் ஸ்டாப் லாஸ் விலை 650 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 789.95 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 520.10 ரூபாயாக உள்ளது. இதன் தற்போதைய சந்தை விலை 678.30 ரூபாயாகவும் உள்ளது. இப்பங்கு கடந்த 1 ஆண்டில் 5.76% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே 3 வருடத்தில் 265.07% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
நிஃப்டி
நிஃப்டி நிறுவனத்தின் ரெசிஸ்டன்ஸ் லெவல் 17,500 ஆகவும், இது புராபிட் புக்கிங் காரணமாக படிப்படியாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது 17,050 என்ற லெவலில் காணப்படுகிறது. ஆக இதனை உடைக்கும்பட்சத்தில் 16,700 வரையில் செல்ல வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எப்படியிருப்பினும் உடனடி சப்போர்ட் லெவல் 17000 ஆகவும் உள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 17,300 ஆகவும் உள்ளது.
பேங்க் நிஃப்டி
பேங்க் நிஃப்டி 40,600 என்ற லெவலுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது 39,500 என்ற லெவலையும் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு செல்லிங் அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இது 39,000 - 40,000 என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications