மும்பை: சந்தை மூலதன அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
இந்தியாவில் டாடா, மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கின்றன. இதில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் மாருதி சுசுகியும், இரண்டாமிடத்தில் டாடா மோட்டார்ஸும், மூன்றாமிடத்தில் மஹிந்திரா & மஹிந்திராவும் இருந்தன.

ஜூன் 14ஆம் தேதி பங்குச்சந்தையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சந்தை மூலதனம் அடிப்படையில் சிறிது நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தது என ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 14ஆம் தேதி பங்குச்சந்தையில் வளர்ச்சி பாதையில் இருந்த டாப் பங்குகளில் மஹிந்திராவும் ஒன்று. இதற்கு காரணம் இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் தின அறிக்கையாகும். ஆனால் இன்றைய வர்த்தக முடிவில் டாடா மோட்டார்ஸ் 3.64 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடனும், மஹிந்திரா & மஹிந்திரா 3.51 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடனும் உள்ளது.
2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 72% என உயர்ந்துள்ளது. இந்த கார் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதலீட்டாளர் நாள் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் 2030 ஆம் ஆண்டுக்குள் புதிதாக ஆறு எஸ்யூவி ரக கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மொத்தமாக 2030 ஆம் ஆண்டுக்குள் புதிதாக 23 கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. இதில் 7 மின்சார வாகனங்களும் அடங்கும்.
2024 ஆம் நிதியாண்டு நிதி அறிக்கை அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம.
இந்த நிறுவனம் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டு சந்தையிலும் தங்களை விரிவு படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை டிராக்டர் பிரிவு என்பது கடந்த 15 ஆண்டுகளாக 7.3% சிஏஜிஆர் கொண்டுள்ளது. எனவே மஹிந்திரா& மஹிந்திரா நிறுவனம் இன்னும் இந்த துறையில் சிறப்பாக செயல்படுவதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
முதலீட்டாளர்களை பொறுத்தவரை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன பங்குகள் வளர்ச்சி பாதையிலேயே இருக்கும் என்று கணிக்கின்றனர். மே மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 71,682 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 17 % வளர்ச்சியை கண்டுள்ளது.
மஹிந்திரா& மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜூன் 14ஆம் தேதி 2,946 ரூபாய் என தனது 52 வார காலம் உச்சத்தை எட்டியது. அதாவது ஒரே நாளில் இந்த பங்கின் மதிப்பு சுமார் 2% உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3.56 லட்சம் கோடி ஆகும். நிறுவனத்தின் ஒரு பங்கின் ஃபேஸ் வேல்யூ 5, புக் வேல்யூ 532.80. நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு வருவாய் 1.22 லட்சம் கோடி ரூபாய் , இதில் லாபம் 11,374 கோடி ரூபாய். இந்நிறுவனத்தில் அதிகபட்சமாக வெளிநாட்டு நிறுவனங்கள் 41% பங்குகளை கொண்டுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications