முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மோசமான காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் இந்நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகளைக் கணித்து முதலீட்டுத் தரத்தை நிர்ணயம் செய்யும் பல பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீட்டுக்கு எச்சரித்துள்ளது.
அதிலும் முக்கியமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முதலீடு மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான Macquarie ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை 'underperform' பிரிவில் சேர்த்துள்ளது.
Macquarie நிறுவனத்தின் அறிவிப்புச் சில்லறை முதலீட்டாளர்கள் முதல் பன்னாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அடுத்த சில மாதத்தில் 42 சதவீதம் வரையில் சரிய வாய்ப்பு உள்ளது எனக் கணித்துள்ளது.
இதன் எதிரொலியாக முதலீட்டாளர்களின் அச்சத்தால் திங்கட்கிழமை வர்த்தகத் துவங்கியதில் இருந்து ரிலையன்ஸ் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு அதிகப்படியாக 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
1,195 ரூபாய்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செப்டம்பர் காலாண்டில் தனது ஆஸ்தான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகத்தில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபத்தில் 15 சதவீத சரிவையும், வருமானத்தில் 24 சதவீத சரிவையும் பதிவு செய்துள்ளது.
இதை மையமாக வைத்து Macquarie நிறுவனம் வெள்ளிக்கிழமை விலையான 2,054 ரூபாய் அளவீட்டில் 42 சதவீதம் வரையில் சரியும். இதனால் ஒரு பங்குகள் விலை சுமார் 1,195 ரூபாய் வீழ்ச்சி அடையும் என அறிவித்துள்ளது.
பன்னாட்டு முதலீட்டாளர்கள்
Macquarie நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீது செய்யப்படும் முதலீட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
முக்கியக் காரணம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிதாகப் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வந்தாலும் இக்குழுமத்தின் 75 சதவீதம் அளவிலான வருவாய் மற்றும் வர்த்தகம் தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தையே சார்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில காலாண்டுகளாகக் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி ஏற்படாத நிலையிலும், பெட்ரோல் டீசல் பயன்பாடு இந்தியாவில் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத காரணத்தாலும் இந்நிறுவனத்தின் வருமானத்தில் 24 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.
தரம் அறிவிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை Macquarie நிறுவனம் 'underperform' என அறிவித்த நிலையில், எம்கே குளோபல், எடெல்விஸ் செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் 'hold' எனவும், BOB கேப்பிடல் 'Reduce' என்ற தரத்தையும் கொடுத்துள்ளது.
ஆனால் மோதிலால் ஆஸ்வல், பிரபுதாஸ், கோல்டுமேன் சாச்சீஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் 'BUY' தரத்தை கொடுத்துள்ளது.
திங்கட்கிழமை
இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 8.69 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்கு விலை 1,876 ரூபாய் அளவீட்டில் உள்ளது. இதன் மூலம் இக்குழுமத்தின் சந்தை மதிப்பீடு 15 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 12.36 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
முக்கிய வருவாய் தளம்
செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருக்கும் பல்வேறு பிரிவுகளின் வருவாய் பங்கீடு அளவு
பெட்ரோகெமிக்கல் ₹29,147 கோடி ரூபாய்
சுத்திகரிப்பு ₹49,859 கோடி ரூபாய்
எண்ணெய் மற்றும் எரிவாயு ₹72 கோடி ரூபாய்
டிஜிட்டல் சேவைகள் ₹267 கோடி ரூபாய்
ரீடைல் ₹38 கோடி ரூபாய்
நிதியியல் சேவைகள் ₹326 கோடி ரூபாய்
பிற துறைகள் ₹304 கோடி ரூபாய்
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications