குளோபல் ஹெல்த் ஐபிஓ ஆங்கர் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
குறிப்பான சிங்கப்பூர் அரசு, நோமுரா, ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், கோடக் மியூச்சுவல் ஃபண்ட், மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பலரும் இதில் அடங்குவர்.
இந்த நிறுவனத்தின் பொது வெளியீடானது நவம்பர் 3, 2022 அன்று வெளியாகியது. இது நவம்பர் 7, 2022 அன்று முடிவடையவுள்ளது.
பங்கு வெளியீட்டு தேதி - நவம்பர் 3 - நவம்பர் 7, 2022
முகமதிப்பு - ஒரு பங்குக்கு ரூ.2 ரூபாய்
விலை - ரூ. 319 - 336
லாட் சைஸ் - 44 பங்குகள்
பங்கு வெளியீட்டின் மதிப்பு - ரூ.2205.57 கோடி
சில்லறை விற்பனை - 35% குறையாது என கூறப்பட்டுள்ளது

இந்த பொது பங்கு வெளியீட்டில் புதிய பங்கு விற்பனை மூலம் 500 கோடி ரூபாய் திரட்டப்படவுள்ளது. இதன் மூலம் 5,07,61,000 ஈக்விட்டி பங்குகள்விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த பங்கு வெளியீட்டில் 319 - 336 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் மொத்தம் 2206 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்படவுள்ளது.
புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் நிதியின் முலம் நிறுவனத்தின் கடனை திரும்ப செலுத்தவும், பொது கார்ப்பரேட் நோக்கத்திற்காகவும் செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கு வெளியீட்டில் பங்கினை வாங்கலாம் என அஷிகா ஆய்வு நிறுவனம், ஜியோஜித் உள்பட பல்வேறு தரகு நிறுவனங்களும் பரிந்துரை செய்துள்ளன.


Click it and Unblock the Notifications