ரூ.1,800 கோடி திட்டத்தை பெற்ற மேன் இண்டஸ்ட்ரீஸ்.. 52 வார கால உச்சத்தை எட்டிய பங்கு மதிப்பு..!

மேன் இண்டஸ்ட்ரீஸ் (Man Industries) இந்தியா லிமிடெட் நிறுவனம் எண்ணெய், எரிவாயு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் நீர் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு ஏதுவான எஃகு குழாய்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. ஜூலை 8ஆம் தேதி பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 6 சதவீதம் உயர்ந்து தன்னுடைய 52 வார கால உச்சத்தை எட்டியது.

மேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிதாக 1850 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றதை அடுத்து, இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்தது. ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி இதன் ஒரு பங்கின் மதிப்பானது 513.70 ரூபாய் என உயர்ந்தது.

ரூ.1,800 கோடி திட்டத்தை பெற்ற மேன் இண்டஸ்ட்ரீஸ்.. 52 வார கால உச்சத்தை எட்டிய பங்கு மதிப்பு..!

இது இந்த நிறுவன பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பாகும். மேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக முதன்முறையாக 1850 கோடி ரூபாய்க்கு ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தை பெற்றுள்ளது என மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த ஒப்பந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே மேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 4000 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை தன்வசம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது வளர்ச்சி பாதையிலேயே இருந்து வருகிறது.

கடந்த ஒரு மாத காலத்தில் இந்த பங்கு சுமார் 31% லாபத்தை பெற்று தந்துள்ளது, ஓராண்டு காலத்தில் 200% அதிகமான லாபத்தை வழங்கியுள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 129 ரூபாய் , 52 வார காலம் உச்சபட்ச மதிப்பு 513 ரூபாய். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3,000 கோடி ரூபாய்.

இந்த நிறுவன பங்கின் பேஸ் வேல்யூ 5 , புக் வேல்யூ 217.0. இந்த நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டில் 2,271 கோடி ரூபாயாக இருந்துள்ளது , இந்த நிறுவனத்தின் லாபம் 2023 ஆம் ஆண்டில் 68 கோடி ரூபாய் ஆகும் .

இந்த நிறுவன பங்குகளில் 48 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்கள் வசமும், 46 சதவீதம் புரமோட்டர்கள் வசமும் இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் 1.64 சதவீத பங்கினையும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 1.26 சதவீத பங்கினையும் வைத்துள்ளன.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+